பெரும்படத்துக்கான முன்னோட்டம் மறைபொருள் குறும்படம்
ஒரு காலத்தில் பெரிய இயக்குநர்களிடம் பல வருடங்கள் பயிற்சி எடுத்தால்தான் ஒரு இயக்குநராக உருவாக முடிந்தது. பின்பு ஒன்றிரண்டு படப் பயிற்சி மட்டுமே ஒரு இயக்குநராவதற்கான தகுதியாக இருந்தது. பின்னர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த மாணவர்களுக்கு ஒரு மவுசு வந்தது.
கடைசியாக குறும்பட இயக்குநர்களுக்கான காலமாக இது இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநராகக் களமிறங்கத் தயாராக நிற்கிறார் அபிஷேக் வெஸ்லி என்ற இளைஞர். அடிப்படையில் பொறியாளரான இவர் சினிமாவின் மீதான ஈர்ப்பால் இரண்டு டாகுமென்டரிப் படங்கள்…
Read Moreகனா படத்தின் திரை விமர்சனம்
விளையாட்டை மையப்படுத்திய கதைகளுக்கெல்லாம் உலகெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’தான். ஹாக்கி, கபடி, மல்யுத்தம், கிரிக்கெட் என்று விளையாட்டுகள்தான் மாறிகொண்டிருக்குமே தவிர அடிப்படைக் கதையும் திரைக்கதையும் ஒன்றின் ‘ஜெராக்ஸ்’ தான் இன்னொன்றுக்கும். ஆனால், என்ன ஒன்று போராடி ஜெயிப்பது அடிநாதமாக இருப்பதால் படம் பார்த்து முடியும்போது ஒரு களிப்பும், நம்பிக்கையும் வரும். அது வெற்றியையும் தரும்.
அப்படி இதுவரை நாம் பார்த்திருகக்கூடிய அத்தனை விளையாட்டுக் கதைகளில் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது ‘கனா’. மேலே குறிபிட்டது போலவே விளையாட்டுதான் ‘பெண்கள் கிரிக்கெட்’…
Read Moreவிஜய் சேதுபதி புதிய படத்தில் இளையராஜா யுவன் இணைந்து இசை
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி தேனியில் துவங்கியது.
YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்துக்கு ‘தயாரிப்பு எண் 2’ என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.
“நான் மிகவும்…
Read Moreசீதக்காதி படத்தின் திரை விமர்சனம்
முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விட வேண்டும். இது வழக்கமான விஜய் சேதுபதி படமல்ல… புதிய கதை சொல்லலில் அமைந்த புது முயற்சி என்பதைத் தெரிந்துகொண்டு யாரும் படம் பார்க்கப் போவது நலம்.
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்றொரு வழக்குச்சொல் உள்ளதல்லவா..? அதுதான் படத்தின் கதையும்…
கலையே உலகம் நடிப்பே உயிர் மூச்சு என்று வாழ்ந்த ‘அய்யா’ ஆதிமூலம் என்ற பழபெரும் நாடக நடிகர் இறந்தும் எப்படி வாழ்ந்தார் என்பதை சற்றே நீண்ட கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி…
Read Moreஅடுத்த சர்ச்சைக்கு அமலா பால் தயார்
படத்தை ஓட்டவும், படத்தில் வாய்ப்பு பெறவும் இப்போது எல்லோருக்கும் ஒரு பரபரப்பு தேவைப்படுகிறது. அதற்கு சோஷியல் மீடியாக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.
இதைப் புரிந்து கொண்ட அமலாபால் அவ்வப்போது ‘நான் இருக்கிறேன்’ என்று அட்டென்டன்ஸ் போட்டுக்கொள்ள அவ்வப்போது ஒவ்வொரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அப்படித்தான் சும்மா இருந்த சுசி கணேசனை உசுப்பிவிட்டு ‘மி டூ’வில் பரபரப்பு…
Read Moreஜானி படத்தின் திரை விமர்சனம்
நாயகன் பிரஷாந்த் நடித்திருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதற்கு அவர் தந்தை தியாகராஜன் மகனுக்காக மேற்கொள்ளும் படத்தேர்வும் ஒரு காரணம் எனலாம். அப்படி இதுவரை பிரசாந்த ஏற்காத ஒரு கேரக்டரை இதில் ஏற்க வைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு.
முதன்முறையாக இதில் எதிர்மறையான பாத்திரம் ஏற்றிருக்கிறார் பிரஷாந்த். அவரும், அவரது நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாகக் கனவு கண்டு சட்டரீதியாக சூதாட்ட விடுதி, மதுபான விடுதி என்று நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கூடவே இன்னும்…
Read More