January 23, 2025
  • January 23, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜிவி பிரகாஷ் செய்த உதவி – குப்பத்து ராணி பாலக் லால்வாணி
March 31, 2019

ஜிவி பிரகாஷ் செய்த உதவி – குப்பத்து ராணி பாலக் லால்வாணி

By 0 1107 Views
பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்புடன் பாலக் லால்வானி ஈர்த்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..? ஜிவி பிரகாஷ் நாயகனாகும் குப்பத்து ராஜா படத்தின் ஹீரோயின். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் லால்வாணி. 
 
“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகமான உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால் அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டியிருந்தது. கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் உதவியாக இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி..!” என்ற பாலக் லால்வானி தொடர்ந்தார்.
 
Palak Lalvani

Palak Lalvani

“சென்னையின் சேரிப் பகுதியில் கதை நடக்கிறது. அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். டிரைலர் மற்றும் பிற காட்சி விளம்பரங்களில் பார்க்கும்போது, படம் சீரியஸான விஷயங்களைப் பேசுவது போல உள்ளது. பாபா பாஸ்கர் சார் என்னிடம் ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே, கதையில் கமர்சியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. என் கதாபாத்திரம்  மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சும்மா வந்து போகும் கதாபாத்திரமாக இல்லாமல் படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது. ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..!”  

 
‘குப்பத்து ராஜா’வில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் கேஎல் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் படட்தைக் காண 5ம்தேதி வரை காத்திருந்தால் போதும்..!