July 6, 2025
  • July 6, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

₹ 2000 படத்தின் திரைவிமர்சனம்

by by Nov 25, 2021 0

2000 ரூபாய் என்றாலே இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம் திடீரென்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக எல்லோரும் அனுபவித்த துன்பம்தான்.

 
எனவே இந்தத் தலைப்பில் ஒரு படம் வந்து இருக்கிறது எனும்போது நமக்கு அந்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதைவிட மக்களுக்கு முக்கியமானது.
 
வழக்கமாக நாம் கடைகளுக்கு செல்லும்போது ரூபாய் நோட்டுகள் கசங்கி இருந்தாலோ அவற்றில் எழுதி இருந்தாலோ…

Read More

மீண்டும் தள்ளிப் போன மாநாடு ரிலீஸ் – கடைசி கட்ட முயற்சிகள் கை கொடுக்குமா..?

by by Nov 24, 2021 0

ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாவதாக சொல்லப்பட்ட சிம்புவின் மாநாடு படம் அப்போது வெளியாகவில்லை. நவம்பர் 25-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் நாளை வெளியாக இருந்த மாநாடு படம் மறுபடியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி இன்று மாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்.

தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த…

Read More

ஆன்டி இண்டியனில் நிஜ ரவுடியை நடிக்க வைத்தேன் – புளூ சட்டை மாறன்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன். ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான்….

Read More

ட்ரெண்டிங் நம்பர் 1-ல் பேச்சிலர் டிரெய்லர்

Read More

தமிழக முதல்வருக்கு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்

by by Nov 22, 2021 0

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன.

அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!

ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது…

Read More

கமலுக்கு கொரோனா உறுதி – பயன்படுத்திக் கொண்ட சி நே சி ம டீம்

by by Nov 22, 2021 0

இன்று பிற்பகலில் சென்னை கமலா திரையரங்கில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீடு நடக்க இருந்தது.

ஆடியோவை வெளியிட கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். எனவே இந்த நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

விருந்தினர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நேற்றிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டு கொண்டிருக்க இன்று காலை திடீர் என்று சில நேரங்களில் சில மனிதர்கள் டீமிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது.

அதில் இன்று காலை பெய்த மழையின் காரணமாக விருந்தினர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அந்த…

Read More

பான் இந்தியா வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்

by by Nov 22, 2021 0

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.  

இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின்…

Read More

ஒரு தந்தையின் அழுகுரலைப் பாடியிருக்கிறேன் – எஸ். ஏ.சி உருக்கம்

by by Nov 21, 2021 0

இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார்…

Read More

சபாபதி திரைப்பட விமர்சனம்

சந்தானம் என்றாலே காமெடிக்கு கியாரண்டி. ஆனால், அதில் கொஞ்சம் எல்லை மீறிப் போய் கடந்த படத்தில் சிறப்புத் திறனாளியை நக்கல் பண்ணப்போய் நிறைய விமர்சனங்களைப் பெற்றார்.

அதற்கு பிராயச்சித்தமாக இந்தப்படத்தில் அவரே சிறப்புத் திறனா லிளி யாக வந்து காமெடியை தாண்டிய குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு சபா(ஷ்)பதி என்று முதலில் பாராட்டி விடலாம்.

பிறவியில் இருந்தே வாய் திக்குவதால் பல பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்கிறார் சபாபதி என்ற சந்தானம். அவருக்கு சிறிய வயதில் இருந்தே ஆதரவான…

Read More

கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆஃப்டர்லைஃப் (Ghostbusters Afterlife) ஹாலிவுட் திரை விமர்சனம்

by by Nov 19, 2021 0

திடுக்கிட வைக்கும் ஆவிக் கதைகளில் திடீரென்று ஹாரர் காமெடி வகைக் கதைகள் வந்து நம்மை சிரிக்க வைத்தன அல்லவா..? அந்த ஐடியாவுக்கு இந்தப் படத்தின் மூலப்படத்தை முன்னோடியாகச் சொல்லலாம்.
 
1984-ம் வருடம்தான் இவான் ரெயிட்மனின் (Ivan Reitman) இயக்கத்தில் கோஸ்ட் பஸ்டர்ஸ் (Ghostbusters) வரிசையில் முதல் படம் வெளியானது. சிங்கம், புலியை எல்லாம் கிராபிக்ஸில் குழந்தைகளுக்குக் காட்டி அலுத்துப்போன வேளையில் அதன் அடுத்த கட்டமாக ஆவிகளையும், பேய்களையும் இப்படி சிஜிக்கு உள்ளாக்கி அவற்றையும்…

Read More