October 26, 2025
  • October 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

வாய்தா படத்துக்காக பல வாய்தா வாங்கினோம் – இயக்குனர் மகிவர்மன்

by by Apr 7, 2022 0

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான ‘வாய்தா’ படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி மகேந்திரன் வெளியிட்டார்.

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை…

Read More

இசைஞானி இளையராஜாவின் இசையில் உலகம்மை வாழ்வியல் திரைப்படம்

by by Apr 7, 2022 0

‘சாதி சனம்’, ‘காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

நெல்லை மாவட்ட பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன்…

Read More

பத்திரிகையாளர் மத்தியில் பிறந்த நாளைக் கொண்டாடிய பிரஷாந்த்

by by Apr 6, 2022 0

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி ,இயக்குநர் ஏ.வெங்கடேஷ்,

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர்.

இவ்விழாவில்…

Read More

லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்

by by Apr 6, 2022 0

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்”

இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா…

Read More

“ஒரு ஆசம் தொடக்கம்” – தமிழ் புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்கும் ஜீ5 !

by by Apr 6, 2022 0

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன்  பல ஒரிஜினல்  தொடர்கள்  வரவுள்ளது.

ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன் ,  கிருத்திகா உதயநிதி ஆகியோர்…

Read More

இடியட் திரைப்பட விமர்சனம்

by by Apr 5, 2022 0

எதை நினைத்து இந்தப்படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வைத்தாரோ இயக்குனர் ராம் பாலா என்று தெரியவில்லை. ஆனால், படமும் திரில்லராகவோ, ஹாரராகவோ, காமெடியாகவோ இல்லமல் குழப்பமாகத்தான் இருக்கிறது. 
 
ஒரு மாதிரியாக நாம் புரிந்து கொள்ளும் கதை என்பது இதுதான்.
 
இடியட்டுகள் வசிக்கும் ஒரு கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கிறார் மகா இடியட்டான ஆனந்தராஜ். ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்த தடகள வீரரை ஊரைக் கொளுத்த வந்தான் என்று பிடித்து வைத்து அவரை எரிக்க தீர்ப்பு சொல்ல, நல்லவேளையாக போலீஸ்…

Read More

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

by by Apr 4, 2022 0

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

“டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த…

Read More

போதை பார்ட்டியில் போலீசிடம் சிக்கிய விஜய் சேதுபதி பட ஹீரோயின்

by by Apr 3, 2022 0

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

ஐதராபாத் போலீசார், ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர் சிக்கினர். அனைவரும் தொழிலதிபர்கள் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்தி…

Read More

செல்ஃபி திரைப்பட விமர்சனம்

by by Apr 3, 2022 0

தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும்  என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம்.

அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு பக்கம்.
 
இதில் மூன்றாவது பக்கம் ஒன்றும் இருக்கிறது. மேற்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ பொறியாளராக வரவேண்டும் என்று தாங்களாகவே கனவுகண்டு அதைப் பிள்ளைகள் மேல்…

Read More

பீஸ்ட் டிரெயிலர் பிடிக்காததால் தியேட்டர் நாசம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by by Apr 3, 2022 0

விஜய் நடிக்க நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருந்த டிரைலர் நேற்று வெளியானதில் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.

நேற்று வெளியான பீஸ்ட் பட ட்ரெய்லர் உலகெங்கிலும் வரவேற்பு பெற்று யூடியூப் சேனலில் பல கோடி பேர் அதனை பார்த்திருந்தும் அந்த ட்ரெய்லர் பற்றிய எதிர்மறையாக மாறுபட்ட கருத்தும் இன்னொரு பக்கம் உலா வருகிறது

பீஸ்ட் பட ட்ரெய்லரை நேற்று சில தியேட்டர்களிலும் திரையிட்டனர். அப்படி…

Read More