July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

by by Apr 23, 2024 0

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.

புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Read More

கல்கி 2898 AD படத்தில் அமிதாப் தோற்றம் நெமாவாரில் வெளியிடப் பட்டது

by by Apr 22, 2024 0

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது.

நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது.

இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு ‘கல்கி 2898 AD’. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும்…

Read More

வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ‘டியர்’ படக்குழு

by by Apr 20, 2024 0

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறதாம்.

நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

படத்தின்…

Read More

ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் நமித் மல்கோத்ரா இணைந்து தயாரிக்கும் ராமாயணம்

by by Apr 13, 2024 0

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது.

திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கதையாக இப்படம் தயாராகிறது.

மும்பை, இந்தியா- ஏப்ரல் 22, 2024 – பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், ‘ராக்கிங்…

Read More

தூய்மைப் பணியிலிருந்து கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தவனின் கதை ‘நாற்கரப் போர்..!’

by by Apr 6, 2024 0

சதுரங்க விளையாட்டு பின்னணியில் சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ்…

Read More

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’

by by Apr 4, 2024 0

சூப்பர்குட் சுப்பிரமணி கதையின் நாயகனாக நடிக்கிறார்..!

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார்.

பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ…

Read More

சீயான் 62 -ல் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்..!

by by Apr 3, 2024 0

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான்…

Read More

ஆன்ட்ரியா நடித்த கா படத்தை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம்

by by Mar 28, 2024 0

நடிகை ஆன்ட்ரியா நடித்துளள கா – தி ஃபாரஸ்ட் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகை ஆன்ட்ரியா நடிப்பில், இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ள கா – தி ஃபாரஸ்ட் படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என எய்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கா –…

Read More

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் பிக்பாஸ் ஷாரிக் ஹாசனின் நேற்று இந்த நேரம்

by by Mar 22, 2024 0

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”. 

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

மர்மமான…

Read More

வெளியான தொடர்கள் திரைப்படங்களின் முழு பட்டியலை வெளியிட்டது பிரைம் வீடியோ

by by Mar 20, 2024 0

*பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது*

ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான தனது உத்திரவாதத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாக அனைத்து மொழிகளின் உள்ளடக்கங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் .
பல்வேறு வகையான புதிய தொடர்கள்,…

Read More