September 16, 2025
  • September 16, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

பாடகர் அவதாரம் எடுத்த பப்ளிக் ஸ்டார்

by by May 13, 2021 0

‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உலா வரும் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள படம் “நான் ஒரு முட்டாள்”.

இந்த படத்துக்காக முதல் முறையாக துரை சுதாகரே பாடகர் அவதாரம் எடுத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இப்படம் குறித்து அவர், ” இது இன்றைய தலைமுறையின் ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயார் ஆகி இருக்கிறது. பொதுவாக இப்போதைய ட்ரெண்டாகி விட்ட மதுப்பழக்கத்தால் கல்லீரல் , கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும்…

Read More

பிரபல தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

by by May 12, 2021 0

மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி. 

இவரும் பிரபல தயாரிப்பாளர் ஆவார். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் என்ற பெயரில் பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறார். விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்தவர் இவர்தான்.

இவருக்கு இன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு அப்போது கண்டறியப்பட்ட ரத்த நாள அடைப்பு இன்று இரவு நடந்த ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சரி செய்யப்பட்டது.

இப்போது அவர் நலமுடன்…

Read More

கிணத்தைக் காணோம் புகழ் நெல்லை சிவா திடீர் மரணம்

by by May 11, 2021 0

அன்றாடம் ஒரு சினிமா பிரபலம் இறந்து வருவது கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இன்று மாலை பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா மரணமடைந்தார்.

வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்த நெல்லை சிவா பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்

இப்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சொந்த ஊரான திருநெல்வேலியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது….

Read More

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக் குறைவு

by by May 10, 2021 0

சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக தன்னுடைய எதிர்மறை செய்திகளை பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். கொரோனா என்னும் நோயே இல்லை என்பது இவர் வாதம்.

இந் நிலையில் அவருக்கு இன்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலில் கொரானா இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை செய்தார்கள். நல்லவேளையாக அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

பிறகு அவருக்கு நோய் கண்டறியும் சிகிச்சையில் அவரது…

Read More

பிரபல மலையாள கதாசிரியர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப் மரணம்

by by May 10, 2021 0

பிரபல மலையாள சினிமா கதாசிரியரும் டைரக்டருமான டென்னிஸ் ஜோசப் காலமானார். ஜோஷியின் டைரக்ஷனில் வெளியான நாயர்ஸாப், நியூடெல்லி, கோட்டயம் குஞ்சப்பன், No.20. மெட்ராஸ் மெயில், சங்கம் உட்பட ப ட ஹிட் படங்களின் கதாசிரியர்.

‘அதர்வம் ‘ படத்தில் சில்க்கை கிராமிய தமிழ்ப் பெண்ணாக நடிக்க வைத்தவர்.

‘ மனு அங்கிள் ‘ படத்துக்காக தேசிய விருது பெற்றவர். 40.க்கும் மேற்பட்ட மலையாள சூப்பர் ஹிட் படங்களின் கதாசிரியர். கதைக்காக அதிக சன்மானம் பெற்ற கதாசிரியர்.

இவரது கதையில் மாதவியின்…

Read More

அண்ணாத்த பாலா அழைத்தவுடன் வந்து செய்த உதவி

by by May 9, 2021 0

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார். 

நடிகர் திரு பாலா பேசுகையில்.. 

தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இதற்கிடையில்…

Read More

கொரோனாவில் இயற்கை எய்திய பாண்டு பற்றிய சர்ச்சை

by by May 6, 2021 0

நாளுக்கு நாள் நாட்டில் பெருகி வரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் விண்ணை எட்டிக் கொண்டிருக்கிறது. 

நகைச்சுவை நடிகரும் ஓவியருமான திரு பாண்டு இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவருக்கு 74 வயது. அவரது மனைவி குமுதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மிகவும் நல்ல மனம் படைத்த திறமைசாலியான பாண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு பிரபு, பஞ்சௌ மற்றும் பிண்டு ஆகிய மூன்று மகன்கள் இருக்கிறார்கள். 

பாண்டு…

Read More

மாநாடு படத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்துபவர் இவர்தான்

by by May 3, 2021 0

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு.

குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்…

Read More

தல பிறந்தநாளில் ரசிகர்கள் இரத்ததானம்

by by May 1, 2021 0

தமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சிவகாசியில் அஜித் ரசிகர்கள் மற்றும் அன்பு தடம் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது, பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.

அண்மைக் காலமாக இரத்த தேவை அதிகமாகி தானம் குறைந்து வருவதால் குழந்தைகள் பலர் பெரும் பாதிப்படைந்து வருவதாக…

Read More

இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பால் மரணம்

by by Apr 30, 2021 0

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர்.

பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.

கொரோனாவோ வேறு…

Read More