March 28, 2024
  • March 28, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

கோடை விடுமுறையில் மீண்டும் தாதா 87 வெளியீடு

by by Mar 10, 2019 0

கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் வெளியான ‘தாதா 87’ திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.
 
அந்தப்படம் தொடர்பாக கலி சினிமாஸ் நிறுவனம் அனுப்பியுள்ள செய்தி இக்கிழே…
 
‘தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
மேலும் தாதா 87 திரைப்படத்தில் ஒரு கதாநாயகி…

Read More

நீயா 2 படத்தில் நடிக்க நிறைய யோசனை செய்தேன் – ராய் லஷ்மி

by by Mar 9, 2019 0

‘ஜம்போ சினிமாஸ்’ தயாரிப்பில் ஜெய், ராய் லஷ்மி, வரலஷ்மி நடிக்கும் ‘நீயா 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விருந்தினர் பேசியதிலிருந்து…

இயக்குநர் வெற்றி மாறன் – 

“இந்தப்பட இயக்குநர் சுரேஷும் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு…

Read More

கடாரம் கொண்டானுக்காக சீயான் விக்ரம் பாடினார்

by by Mar 8, 2019 0

கமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. 
 
இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்திருக்கும். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. 
 
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். 
 
“தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
ஏறிவா மேலே…

Read More

பூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்சலண்ட் சொன்ன ரஜினி-கண்ணன் நெகிழ்ச்சி

by by Mar 7, 2019 0

நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது.

இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது.

உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார்.

“ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்ததும்…

Read More

ஹீரோ ஹீரோயின் எஸ்கேப் ஆனாலும் கைகொடுத்த எஸ்கேப்

by by Mar 7, 2019 0

படம் தொடங்கிய ஒரே வாரத்தில் ஹீரோ ஹீரோயின் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட தடுமாறாமல் படத்தை தரமாக முடித்திருக்கிறார் இயக்குநர் செல்வக் கண்ணன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஓடிப் போன அந்த நல்ல உள்ளங்கள் ‘பிரச்சினை புகழ்’ அபி சரவணனும், அதிதி மேனனும். மேலே படியுங்கள்.

உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் ‘பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸி’ன் ‘நெடுநல்வாடை’.. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம்…

Read More

குற்றாலத்தில் தொடங்கிய தனுஷ் பட தகவல்கள்

by by Mar 6, 2019 0

டி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இது இவர்களது 34 வது தயாரிப்பாகும். ‘தொடரி’ படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர்.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். ‘கொடி’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.

நடிகை சினேகா ‘புதுப்பேட்டை’ படத்தில் 2006 ஆம் ஆண்டு…

Read More

பெண்களை இழிவு படுத்தாமல் பெருமைப்படுத்தும் படம்

by by Mar 6, 2019 0

காலத்துக்குக் காலம் முன்னணி நடிகைகளுக்கு காக்கிச் சட்டை போட்டுவிட்டு ஒரு போலீஸ் ஸ்டோரி வந்து கொண்டிருக்கும். இந்த சீசனில் நந்திதா ஸ்வேதாவை வைத்து ‘ஐபிசி 376’ என்று ஒரு போலீஸ்ஸ்டோரி தயாராகிறது. இது த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதையைக் கொண்டதாம்.

நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி மேற்கொள்வதுடன் படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய…

Read More

‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

by by Mar 5, 2019 0

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர்…

Read More

ஓவியா கைதாவாரா 90 எம் எல் பரபரப்பு

by by Mar 5, 2019 0

பரபரப்பாக வெளியான 90 எம் எல் படம் ஒரு புறம் ஒரு சாராரின் பாராட்டுகளையும், இன்னொரு புறம் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

பாராட்டுபவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை படம் எடுத்துக் காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால், எதிர்ப்பவர்கள் பெண்களை தவறாக சித்திரிப்பது மட்டுமல்லாமல் அவர்களைத் தவறான வழியில் செல்ல படம் தூண்டுவதாகவும் கூறுகிறார்கள்.

இந் நிலையில், 90 எம்.எல் படத்தில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் நடித்த ஓவியாவை கைது செய்ய வலியுறுத்தி இந்திய தேசிய லீக்…

Read More

செல்பி எடுக்க முதலில் அனுமதி கேட்க வேண்டும் – கார்த்தி

by by Mar 4, 2019 0

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த படத்தில் இந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்ததூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச…

Read More