சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி யின் சைவ அசைவ உணவகம் கேலரி
‘அம்மன்’ உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகம் மற்றும் ‘அய்யன்’ உயர்தர அசைவ உணவகம் ஆகிய…
Read More
ஆளில்லாமல் ரத்தான பிகில் காட்சிகள் மேலாளர் தகவல்
150 கோடிக்குத் தயாராகி 200 கோடி பிஸினஸ் ஆகி, தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் என்றெல்லாம் புகழப்பட்ட ‘பிகில்’ படம் எதிர்மறையான விமர்சனங்களால் பின்னுக்குப் போனது.
படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிவில்தான் (மூன்று நாள்களும் விடுமுறை என்றறிக…) 100 கோடி கிளப்பில் இணைந்தது என்றார்கள். அதற்குப் பிறகு வார நாள்கள் என்பதால் கண்டிப்பாக வசூல் அதில் மூன்றில் ஒரு பகுதிதான் என்றிருக்கும் என்ற நிலையில் எப்படி முதலை வசூலித்து லாபம் ஈட்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம்…
Read More
பரவை முனியம்மா வுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஓடி வந்து உதவிய ஹீரோ
இளம் நடிகைக்கு ஒன்று என்றால் ஓடி வந்து உதவ பலபேர் தயாராக இருக்க, பரவை முனியம்மாவுக்கு ஓடி வந்து உதவியிருக்கிறார் ஒரு ஹீரோ. அவர் அபி சரவணன்.
நடிகை அதிதிமேனனுடன் திருமண சர்ச்சைகளில் நிறைய அவர் மீது விமர்சனங்கள் வந்தாலும், அவ்வப்போது சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவருகிறார் அபி சரவணன்.
சில…
Read More
மீண்டும் விஜய் படத்துடன் கார்த்தியின் சுல்தான் போட்டியா..?
இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகிலு’டன் கார்த்தியின் ‘கைதி’ தைரியமாக மோதி வெற்றியும் பெற்றுவிட்டது. இது ஒன்றும் கார்த்திக்கு புதிதல்ல… இதேபோல் 2011ம் ஆண்டு வெளியான விஜய்யின் காவலனுடன் மோதிய கார்த்தியின் சிறுத்தை வெற்றி பெற்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான விஜய் 64 படம் இப்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியும் அப்படத்தில் இணைய அத்ன் எதிர்பார்ப்பு இப்போதே கூடிக் கிடக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, ‘கைதி’யைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடித்து பாக்யராஜ் கண்ணன்…
Read More
ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த நாள் முதல் பார்வை
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்க கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார்.
இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் அப்போது அவர் வாழ்த்துக் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம். சரவணன், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து…
Read More
முழு நடிகையான பாக்ஸிங் வீராங்கனை பகீர் படங்கள்
நடிகையென்று வந்துவிட்டால் எப்படி நடிக்கச் சொல்கிறார்களோ, எப்படி உடை அணியச் சொல்கிறார்களோ அப்படி அணிந்துவிட்டுப் போக வேண்டியதுதான். அப்படி நடிக்க மாட்டேன், இப்படி உடை அணிய மாட்டேன் என்றால் ஓரம்கட்டி விடுவார்கள்.
“என்ன ஒன்று… கதைக்குத் தேவைப்பட்டது… அப்படி நடித்தேன்…” என்று பேட்டி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். அப்படித்தான் ஆனது அந்த பாக்ஸிங் வீராங்கனையின் நிலை.
இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமான ரித்திகா சிங், உண்மையிலேயே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை. அந்தப்படத்துக்கு நிஜ…
Read More
ரஜினியை முதல்வராக்கும் முயற்சியில் எஸ்.எஸ்.ராஜமௌலி
ரஜினி எப்போதும் உச்சத்தில்தான் இருக்கிறார். ஆனாலும், அவரது ‘டை ஹார்ட்’ ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ரசிகர்களும் அவரின் மீது ஈர்ப்பாக இருந்த கால கட்டத்தில்… அவரும் முழு ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருந்த போதே அவருக்காகவே ‘முதல்வன்’ கதையை எழுதினார் இயக்குநர் ஷங்கர்.
அதில் ரஜினி மட்டும் நடித்திருந்து கட்சியை அறிவித்து அதற்கடுத்து வந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ‘ஷ்யூர் ஷாட்’டாக அப்போதே தமிழக முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், அதற்கான தைரியம் அவருக்கு அப்போது வராமல் போக,…
Read More
சபாஷ் விஜய் ரசிகர்கள் – சுர்ஜித் மரணம் ஃபாலோ அப்
இரண்டரை வயது குழந்தை சுர்ஜித்தின் மரணம் நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுக்ளை மூட எல்லோருக்கும் பொறுப்பைத் தோற்றுவித்திருக்கிறது சுர்ஜித்தின் மரணப் போராட்டம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களைப் பெற்று வருகிறார்கள். அவற்றின் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து வரும் அதே சமயம், தன்னார்வமாக பொதுவானவர்களும் இச்செயலில் இறங்கியிருக்கிறார்கள்.
மக்களுக்கான பொறுப்புணர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் நக்கீரன் இதழும் இதுபோன்ற கைவிடப்பட்ட திறந்து கிடக்கும்…
Read More
மானாட மயிலாட டான்சரான பட ஹீரோ சாலை விபத்தில் பலி
தீபாவளியின் துக்க நிகழ்வுகளில் தீ விபத்துகள்தான் முக்கியமாக இடம்பெறும் என்பதில்லை. சாலை விபத்துகளும் நிகழ்வதுண்டு. அப்படி ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் ஒரு பிரபலம்.
லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றிக்கு விஜய் கொடுத்த பரிசு
சினிமாவின் கதைக்குள்ளேதான் ஆச்சரியங்கள் நடக்குமென்பதில்லை. கதைக்கு வெளியிலேயும் அந்த ஆச்சரியங்கள் நடக்கலாம்.
இப்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த தீபாவளிக்கு லோகேஷ் இயக்கிய ‘கைதி’, விஜய்யின் ‘பிகிலு’டன் மோதியது. இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் தீர்ப்பும் ‘பிகில்’ படத்தைவிட ‘கைதி’ சிறப்பாக வந்திருக்கிறது என்பதே.
இதனால் தன் அடுத்த படம் லோகேஷின் இயக்கத்தில் அமைந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கும் விஜய் , எதிர்பாராத இன்ப…
Read More
…