ஜடா பார்த்தவர்களை கோபப்படுத்திய ஏபி ஸ்ரீதர்
டாக்டர் சிவகார்த்திகேயன் நாயகியாக தெலுங்கு பிரியங்கா
தன் படங்களின் வசூலின் மூலம் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரித்து அதன் மூலம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் முன்னிலை பெற்று வருகிறது. இந்த இருவரும் ‘ஹீரோ’ படத்தில் இணைந்தனர். ‘ஹீரோ’ வெற்றிக்காக காத்திருக்கும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது வெற்றியை உறுதியாக்கியுள்ளது.
‘கோலமாவு கோகிலா’ மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வழங்க,…
Read More
அறிவழகன் இயக்க ஸ்பை த்ரில்லர் படத்தில் அருண் விஜய்
தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள்.
ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’…
Read More
சோதிடம் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் ஹீரோ
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு ஆகியோர் பணி புரிந்துள்ளனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி…
Read More
கிளாமர் வீடியோ போட்டு தெறிக்க விடும் ஷாலு
இப்போதைய நடிகைகளின் டிரெண்டே அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ எடுத்து தங்களின் சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட வேண்டியதுதான்.
அதைப்பார்த்து லைக்குகளும் கமெண்ட்டுகளும் ஒருபக்கம் அள்ள, இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்புகளும் வந்து சேருமென்பது அவர்களின் திட்டம்.
இன்றைக்கு டிக்டாக்கில் குடும்பப் பெண்களே இப்படி பப்ளிசிட்டி தேடுகையில் நடிகைகள் இது கூட செய்யாவிட்டால் எப்படி எங்கிறீர்களா..? அதுவும் சரிதான்.
அப்படி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் சூரியின் ஜோடியாகி பெயர் வாங்கிய நடிகை ஷாலு ஷமு மலேசியாவில் எடுத்த தன் கிளாமர்…
Read More
ஆபாசமாக பேசிய மீனா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
“பெண்ணுறுப்பின் மயிரே…”ஏன்று பொருள்படும் ஒரு வார்த்தையை நடிகை மீனா பேசினால் அதிர்ச்சி ஏற்படுமா, ஏற்படாதா..?
‘பெண்ணுறுப்பு’ என்பது கெட்ட வார்த்தையில்லை. அது ஒரு உறுப்பைக் குறிப்பது. அதேபோல்தான் ‘மயிர்’ என்பதும். ஆனால், இவையெல்லாம் பொருள் சொல்லாக இருக்கும் வரை தவறில்லை. அதுவே ஒரு மனிதனை வசை பாட இந்த சொற்களைப் பயன்படுத்தும்போது அது ‘ஆபாச’ வார்த்தையாக மாறிவிடுகிறது.
அதைத்தான் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் மீனா ஒரு வெப் சீரீஸில் பேசியிருக்கிறார். ஜீ5 தயாரிக்கும் ‘கரோலின் காமாட்சி’ என்ற…
Read More
தர்பார் இசை வெளியீடு ரஜினி என்ன செய்யப் போகிறார்
லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் லுக், இரண்டாம் லுக் போஸ்டர்கள் மற்றும் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியான நிலையில் இப்போது படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது.
வரும் 7-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருக்கும் இசைவிழா மிக பிரமாண்டமான முறையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அனிருத் இசையில் அமைந்த படத்தொய்ன் பாடல்கள் அன்று ரசிகர்கள் புடைசூழ வெளியாகவிருக்கின்றன.
பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக…
Read More
யோகிபாபுவை டென்ஷனாக்கிய தனுசு ராசி டீம்
இன்றைக்கு இருக்கும் நடிகர்களில் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் யோகிபாபுதான். நாள் கணக்கு கால்ஷீட்டில் அவரை நடிக்கவைத்துத் தங்கள் படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்கள் இன்றைய கோலிவுட் படைப்பாளிகள்.
அப்படித்தான் அவரை சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்குக் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அனுபவமில்லாத இயக்குநருக்கு யோகிபாபுவை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியாமல் சொதப்பியதில் அவரை இரண்டு நாள்களில் வெட்டியாக்கி இரண்டொரு வசனம் பேசவைத்து அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் நின்ற இடத்திலேயே நிற்க வைத்துப்…
Read More
சீறு பட பாடலைக் கேட்க இமான் போட்ட கண்டிஷன்
ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும்.
அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப் பார்வைத் திறனாளி நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குத் தன் இசையில் பாடும் வாயப்பைக் கொடுத்திருக்கிறார்.
இந்த விஷயம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவரது இசையில் திருமூர்த்தி பாடிய…
Read More
நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் அமீர்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் அமீர் இப்போது நடிகர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வட சென்னை’.
அதில் கேரக்டர் ரோலில் வந்திருந்த அமீர், ஒரு ஹீரோவுக்குரிய கவனம் பெற்றது அவரது கேரக்டரைசேஷனால் மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பினாலும்தான்.
இப்போது அவர் ஹீரோவாகவே நடிக்கும் படம் தொடங்கிவிட்டது. அதில் அரசியல்வாதியாக வருகிறார் அவர். ‘நாற்காலி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் தமிழக அரசியலை நையாண்டியுடன் விமர்சிக்கப் போகிறாராம் அவர்.