July 7, 2025
  • July 7, 2025
Breaking News
December 3, 2019

சீறு பட பாடலைக் கேட்க இமான் போட்ட கண்டிஷன்

By 0 1135 Views

ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும்.

அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப் பார்வைத் திறனாளி நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குத் தன் இசையில் பாடும் வாயப்பைக் கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவரது இசையில் திருமூர்த்தி பாடிய பாடலின் பாடல் வரிகள் வீடியோ நேற்றுத்தான் வெளியானது. பரபரப்பாக கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாடலும் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடியோவும் பகிரப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.

ஆனால், இந்த வீடியோவைப் பார்க்கவும் கேட்கவும் பகிரவும் இமான் ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாவது, இந்தப்படலைப் பாடியவர் சிறப்புத்திறன் கொண்டவர் என்பதற்காக பரிதாபத்துடன் அதைச் செய்யாதீர்கள். அவரது திறமையில் நம்பிக்கை கொண்டு அதைச் செய்யுங்கள் என்பதுதான் அது.

நியாயமான கண்டிஷன் தான்… கீழே வீடியோவைப் பாருங்கள். எந்தப் பாடகருக்கும் குறைவில்லாத குரல் வளம் திருமூர்த்தியுடையது என்பது புரியும்.