December 12, 2024
  • December 12, 2024
Breaking News

Currently browsing சிறப்புக் கட்டுரை

தங்கலான் – முதல் முன் விமர்சனம்

by by Oct 31, 2023 0

‘தங்கலான்’ முதல் புகைப்படம் வெளியான வினாடியில் இருந்து இதைச் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். 

நாளை படத்தின் டீசர் வெளியாக இருக்க… இந்த முன் விமர்சனத்தைப் பந்திக்கு வைத்தே ஆக வேண்டிய பரபரப்பில் இதை முன் வைக்கிறேன்.

ஒரு படத்தை முதல் முறை பார்த்து முடித்ததும், இது இன்ன விளைவை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிப்பது சிறந்த விமர்சகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அதைவிடச் சிறந்த திறன், படத்தின் டீசரையோ ட்ரைலரையோ பார்த்து அந்தப் படம் என்ன விளைவை ஏற்படுத்தும்…

Read More

நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

by by Feb 21, 2023 0

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி…

Read More

இந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று

by by Nov 26, 2020 0

வரலாற்றில் இன்று ( 26.11. 1949) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட தினம். 

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 300 நிபுணர்கள் கொண்ட அரசியல் அமைப்பு குழுவால் (Constitutional Assembly) உருவாக்காப்பட்ட இந்த அரசியல் அமைப்பு சட்டம் பின்னர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கு வந்த நாள்தான் 1950 ஜனவரி 26ம் நாள்!

இது தான் இதுவரை உலக நாடுகளில் எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும்.

இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள்…

Read More

உயர்விலும் தாழ்விலும் உச்சம் பார்த்த தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் மறைந்த நாள் இன்று

by by Nov 1, 2020 0

தமிழ் திரையுலகின் அந்தக் கால சூப்பர் ஸ்டார் நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதர் 1959-ம் ஆண்டு இதே நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.

1909- ஆம் வருடம் ஜனவரி 3 ஆம் தேதி மாயவரததில் பிறந்த மாயவரம் கிருஷ்ணசுவாமி தியாகராஜன் நடிகரான பின் எம்கேடி என்று சுருக்கமாகவும் அழைக்கப்பட்டார்.

1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அவர் நடித்த 6 படங்கள்…

Read More

தமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று

by by Sep 19, 2020 0

தமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் கே. பி. சுந்தராம்பாள், மறைந்த நாள் இன்று (செப்-19/1980)

இன்றைக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன் தாராவை பெண் சூப்பர் ஸ்டார் என்கிறோம். ஆனால், இந்த சாதனையை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே செய்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள் என்பது இன்றைய தலைமுறையினருக்கு வியப்பாகவும் புதுமையாகவும் இருக்கலாம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தன் சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தியவர் கே பி சுந்தராம்பாள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்ச ரூபாய் மதிப்பு…

Read More

போனாளே பொன்னுத்தாயி 10 வருடம் முன்பு இதே நாளில் மறைந்த ஸ்வர்ணலதா

by by Sep 12, 2020 0

தனித்துவமான குரல் வளத்தை பெற்ற பாடகி ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், யாரிந்த பாடலை பாடியது -ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகி விட்டது.

ஆனால் ஸ்வர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. அட்டே இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல்.

ஸ்வர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்கிரதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகிவிடும் என்று பல பேரும்…

Read More

உலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்

by by Aug 6, 2020 0

இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று போற்றப்படும் ராஜேந்திர சிங் (Rajendra Singh) பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 6). 💦

சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ள அவரைப் பற்றிய சில குறிப்புகள்…

  • உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில் (1959) பிறந்தவர். தந்தை விவசாயி. ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் கற்றார். ஆன்மிகம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பள்ளியில் இவரது ஆங்கில ஆசிரியர்…

    Read More

3 மணி நேரத்தில் 4 ரீல்களுக்கு இசை அமைத்த சாதனை – இசைஞானி பற்றி ஏவிஎம் சரவணன்

by by Jun 3, 2020 0

AVM Saravananநியாயப்படி இன்றுதான் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் ஜூன் 3 ஆகிய இன்று தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்பதால் தன் பிறந்த நாளை ஒரு நாள் முன்னதாக மாற்றிக்கொண்டார்.

ஆக இசைஞானியின் உண்மையான பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை முன்பொரு சமயம் ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்னதிலிரந்து பகிர்ந்துள்ளோம்…

“இயக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு…

Read More

தாமஸ் ஆல்வா எடிசன் திரைப்படக் கேமராவை கண்டுபிடித்த நாள் இன்றுதான்

by by May 20, 2020 0

தாமஸ் ஆல்வா எடிசன் 1891-ம் ஆண்டில் இதே நாளில்தான் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார்.

1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜுல்ஸ் மாரே என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்தத் துப்பாக்கியைச் சலனபடக் கேமராவாக உருமாற்றத் திட்டமிட்டார்.

அதன் குண்டு செல்லும் குழாயின் முகப்பில் ஒரு லென்ஸைப் பொருத்தினார். அதற்குப் பின்னாலுள்ள குண்டுகள் போடும் அறையைப் படச்சுருள் (தகடு)…

Read More

தென்னிந்திய தியேட்டர்களின் தலைமகன் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாள்

by by Apr 18, 2020 0

1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட்.

அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கியிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் எல்லாம் மக்கள் கூடி வியப்புடன் பார்த்தனர்.

அப்போது சாமிக்கண்ணுக்கு யோசனை ஏற்பட்டது. அதை வாங்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது பிரெஞ்சுக்காரர்கள் படக் கருவியை விற்க முடிவு செய்தனர். உடனே சாமிக்கண்ணு மனைவியின் நகைகளை விற்று…

Read More
  • 1
  • 2