May 8, 2024
  • May 8, 2024
Breaking News

Currently browsing அரசியல்

மிக விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் – முக ஸ்டாலின்

by by Jun 17, 2018 0

நேற்று சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர்.காலனியில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கல்ந்துகொண்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…

“கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தைத தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில்… கடல் கடந்து எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது.

அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் எங்கும்…

Read More

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

by by Jun 15, 2018 0

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து…

இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது

பருவ மழை தொடர்ந்தால் நடுவர் மன்ற உத்தரவின்படி மாதா மாதம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது.

கர்நாடகாவில் மழை பெய்து வருவதை அடுத்து, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக…

Read More

பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சவால் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

by by Jun 13, 2018 0

இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம்.

“அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார்.

ட்விட்டரில் அதை வெளியிட்டது மட்டுமல்லாமல் அதில் விராத் கோலி, ஹ்ரித்திக் ரோஷன், சாய்னா நேவால்…

Read More

பெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்

by by Jun 11, 2018 0

இன்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதிலிருந்து…

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கு வேளையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறையும்.

இதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய…

Read More

திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் – சந்திரபாபு நாயுடு

by by Jun 8, 2018 0

மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு திருப்பதி கோவிலைக் கையகப்படுத்தத் திட்டம் வகுப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

“கோவிலைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. அந்தத் திட்டம் நிறைவேறாது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதித் திட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம்.

திருப்பதி பாலாஜியின் அருளால்தான் 2003-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரமான தாக்குதலில் உயிர் பிழைத்தேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க எக்காரனம்…

Read More

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்

by by Jun 5, 2018 0

“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..!” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்…

“கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும்…

Read More

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் கமல் – தமிழருவி மணியன்

by by Jun 4, 2018 0

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய ரஜினியின் பேச்சுக்குக் கமலும் ரஜினிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அது பற்றி தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையிலிருந்து…

“திரு.கமலஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.

மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க…

Read More

கர்நாடகாவில் காலா திரையிடக் கூடாதென்பது என்ன நியாயம் – பொன். ராதாகிருஷ்ணன்

by by Jun 2, 2018 0

கோவை மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதிலிருந்து…

“கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்குத் தீர்வு தந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமையக் கையெழுத்திட்ட நிதின் கட்காரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. அந்த சம்பவம்…

Read More

குண்டடி பட்டவர்கள் சமூக விரோதிகளா… ரஜினி விளக்க வேண்டும் – சீமான்

by by May 31, 2018 0

ரஜினியின் தூத்துக்குடி வருகையை விமர்சித்து நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதிலிருந்து…

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைத் திசைதிருப்பவே அங்கு ரஜினிகாந்த்தை அனுப்பியுள்ளார்கள். அவர் ஆறுதல் கூற வரவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் பலியானதற்கு ஆறுதல் கூறவந்த ரஜினிகாந்த் , திறந்த காரில் கைகளை உயர்த்தியபடி ஓட்டு கேட்பது போல் வந்தார். அவர் சமூக விரோதிகள் என்று கூறுவது யாரை? இதற்கு ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏராளமான மக்கள் குண்டடி பட்டுக்…

Read More

எந்த இடத்திலும் காவலர்கள் மேல் கைவைக்கக் கூடாது – தூத்துக்குடியில் ரஜினி பேட்டி

by by May 30, 2018 0

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்த ரஜினிகாந்த் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது…

இங்கே நடந்த கலவரத்தில் வன்முறை செய்தது சமூக விரோதிகளின் செயல். அவர்கள்தான் உள்ளே நுழைந்து போராட்டத்தைத் திசை திருப்பியிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அப்படித் தான் நடந்தது. இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது.

இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க…

Read More