November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing அரசியல்

சுப்ரீம் கோர்ட் கிளை சென்னையில் அமைய வெங்கையா நாயுடு விருப்பம்

by by Aug 11, 2019 0

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது.

இந்த நூல் வெளியீடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-08-2019) நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவே தலைமை தாங்க, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நூலை வெளியிட்டார்.

இவ்விழாவில் தமிழக…

Read More

மறைந்த சுஷ்மா சுவராஜ் பற்றிய சில குறிப்புகள்

by by Aug 7, 2019 0

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ்.

கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி தன் 67வது வயதில் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி…

Read More

கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

by by Jul 26, 2019 0

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. அதில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பெறப்பட்டதை அடுத்து குமாரசாமி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று காலை ஆளுநர் வஜூபாய் வாலாவை…

Read More

நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு நன்மையே – வைகோ

by by Jul 21, 2019 0

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்து அறிக்கையிலிருந்து…

“இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு…

Read More

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தம் – மோடி வரவேற்பு

by by Jul 17, 2019 0

இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஆனால் ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக…

Read More

தமிழிசைக்கு அடுத்து தமிழக பாஜக தலைவர் யார்?

by by Jul 14, 2019 0

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் தமிழிசையின் பதவி காலம் சில மாதங்களில் முடிய இருப்பதால் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்று அக்கட்சி உள்ளேயும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்க பட்டு வருகிறது.

உலகிலேயே மிக கடினமான பதவி என்றால் அது தமிழக பாஜகவின் தலைவர் பதவி தான். நடை,உடை,பேச்சு, என அவர்களின் அத்தனை நடவடிக்கையும் கேலிக்குள்ளாக்கப்படும். தமிழகத்தில், அத்தனையும் மீறி…

Read More

காந்தி ஜெயந்திக்கு பாஜக எம்பிக்கள் பாதயாத்திரை செல்க – மோடி

by by Jul 10, 2019 0

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்தது..இந்த தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
 
இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினெட் உறுப்பினர்கள், மாநில முதல் மந்திரிகள் மற்றும் காந்தியை பின் தொடரும் தொண்டர்கள் பலர் உள்ளனர். 
 

இதனையடுத்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில்,  மத்திய அரசு வரும் அக்டோபர் 2ம்…

Read More

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

by by Jun 30, 2019 0

மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தைக் கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கே மாநில அரசுகளும், மாநில அரசியல் கட்சிகளும், கற்றறிந்தோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இப்போது மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’, ‘மாநிலங்களில் பணியாற்றும் மாஜிஸ்திரேட்டுகளைக் கூட மத்திய அரசே தேர்வு செய்யும்’ என்றும், எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்ப்பதைப் போல, அறிவித்து,…

Read More

சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்-வைகோ

by by Jun 23, 2019 0

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, இந்திய அரசு பல வழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது.

ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து…

Read More

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி

by by Jun 8, 2019 0

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியடைந்தது.

இதையடுத்து கட்சி கூட்டத்தில் நாட்டிலேயே முதல் முறையாக 5 பேரை துணை முதல்வராக நியமித்தார் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் 25 கேபினட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுத்தார். அவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற நாள் முதலே, தன் அதிரடி நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அமராவதியில் உள்ள தலைமை…

Read More