November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என் பக்கத்து வீட்டுக்காரரின் கதைதான் கன்னி மாடம் – போஸ் வெங்கட்
August 19, 2019

என் பக்கத்து வீட்டுக்காரரின் கதைதான் கன்னி மாடம் – போஸ் வெங்கட்

By 0 645 Views

இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் “கன்னிமாடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

கன்னிமாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அவர் கூறியதாவது….

இப்படத்தின் டிசைன்ஸ் பார்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கன்னி மாடம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்துள்ளது. அதனை கொண்டு சேர்த்த பத்திரிகை ஊடகத்தினருக்கும், சமூக வலைத்தள ஊடகத்தினருக்கும் மேலும் இதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Kanni Maadam First Look

Kanni Maadam First Look

நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த “கன்னி மாடம்”.

மேலும் இப்படத்தின் தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பொருத்தத்தைப் பற்றி விளக்கினார் போஸ் வெங்கட். அதாவது, “நான் இதற்கு முன் சொன்னதுபோல், பெண்களுக்கு அசாத்தியமான கோட்டையாக இருப்பது பற்றிய சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவல் தான் இதற்கு தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த கன்னி மாடம் என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது. மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றிவைத்தனர். சில இடங்களில், பெண்கள் பருவ வயதை அடையும் அவர்களை நேரத்தில் கட்டாயப் வீட்டுக்குளே இருக்க வைக்கின்றனர். அந்த நேரத்தில் கன்னி மாடத்தின் விளக்கு ஏற்றப்படும். என்று படத்தலைப்பு விளக்கம் கூறினார்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர் போஸ் வெங்கட்.