மணிரத்னத்தின் பாசறையில் பயின்ற இயக்குனர் கண்ணன் ‘பர்ஃபெக்ஷனை’ விரும்புபவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஷூட்டிங்கில் மட்டுமல்லாமல் போஸ்ட் புடக்ஷனில் டப்பிங் பேசுவதில் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை டப்பிங் பேசவைப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேசச் சொல்லி வலியுறுத்துவார்.
தன் முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்திலேயே பாவனாவை டப்பிங் பேச வைத்தவைத்தவர் அவர். இப்போது கண்ணன் இயக்கி முடித்திருக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் மேகா ஆகாஷைத் தன் குரலிலேயே டப்பிங் பேச வைத்திருக்கிறார்.
இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம் ‘மேகா’வேதான். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அவரது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் நடிப்பைப் பார்த்து நாங்கள் வியந்தோம்.
அவருடைய திறமைகள் டப்பிங் செய்யும் கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடுதான் இருந்தார். ஆனால் அவர் ஒத்துக்கொண்டு டப்பிங்கை முடித்தபோது எங்களுக்கு நிறைவாக அமைந்தது..!” என்றார்.
பூமராங் படத்தை ‘மசாலா பிக்ஸ்’ சார்பில் ஆர். கண்ணனே தயாரித்து, இயக்கியிருக்கிறார். அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ‘உபென் படேல்’ வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .
இதுபற்றி “ஏராளமான திறமையாளர்கள் கைகோர்த்துள்ள இந்த ‘பூமராங்’ நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்..!” என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் ஆர் கண்ணன்.
‘வெற்றியைத் தட்டிக்கொண்டு திரும்ப வரும் பூமராங்’நு சொல்லுங்க..!