January 15, 2025
  • January 15, 2025

போட்டுக் கொடுத்ததால் பாடலாசிரியர் பெயரை போடாத சக்தி சிதம்பரம் – ஜாலியோ ஜிம்கானா பட விவகாரம்

by on November 20, 2024 0

‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, “நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது படம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் […]

Read More

மொக்கைக் கதையில் கமலை நடிக்க வைத்தேன் – ஆர்.வி. உதயகுமார் வாக்குமூலம்

by on November 20, 2024 0

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், […]

Read More

நயன்தாரா : பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப் பட விமர்சனம்

by on November 19, 2024 0

நயன்தாரா சினிமாவில் நடிகையாக அறிமுகமானது, தமிழ் சினிமாவில் நுழைந்து சில தடைகளுக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்ததோடு, அவரது காதல் திருமணத்தைப் பற்றி விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது ’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairy Tale – நயன்தாரா – தேவதைக் கதைக்கு அப்பால்) என்ற ஆவணப்படம். நயன்தாராவின் ஆவணப்படம் என்ற உடன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவரது காதல் கதைகளை தான், ஆனால் இதில் அவர் தான் கடந்து […]

Read More

நிறங்கள் மூன்று படத்தை எந்த ஜேனரிலும் அடைக்க முடியாது – அதர்வா முரளி

by on November 19, 2024 0

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட நடிகர் அதர்வா படம் குறித்து பேசுகையில், “கார்த்திக்கின் ‘துருவங்கள் பதினாறு’ படம் பார்த்ததில் இருந்தே அவருடன் […]

Read More

கங்குவா திரைப்பட விமர்சனம்

by on November 15, 2024 0

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவை ஒரு பான் இந்திய ஸ்டாராக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து மிரட்டி இருக்கும் படம். 

1070 இல் ஆரம்பிக்கும் கதை 2024 இல் வந்து இப்போதைக்கு முற்றுப்பெறுகிறது.  அது எப்படி என்பதை இரு வேறு காலகட்ட சுவாரஸ்யத்துடன் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா.

தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் சூர்யா ஒரு பிளேபாயாகவும், காவல்துறை நேரடியாக பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் Bounty hunter ஆகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட அதே டூட்டியில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக வருகிறார் திஷா பதானி.

இவர்கள் இருவருக்கும் முறையே அல்லக் கைகளாக யோகி பாபுவும், ரெடின்ஸ் கிங்ஸ்லியும் வருகிறார்கள். இவர்கள் செய்யும் அலப்பறைக்கு இடையில் ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சி முகாமில் இருந்து தப்பிய சிறுவன் ஒருவன் குறுக்கிட அந்தச் சிறுவன் மீது சூர்யாவுக்கு ஒரு இனம் புரியாது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் வேளையில் கடந்த வரலாற்றுக் காலத்தில் நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வருகின்றன. அதன் முடிவு என்ன என்பது மீதிக்கதை.

ஆனால் அது முடியவில்லை. இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பது உலகறிந்த விஷயம்தான்.

பிளேபாய், ஆக்ஷன் ஹீரோ, பாசக்கார மனிதன் என்று எல்லா வித ரசிகர்களையும் கவர பலமுகம் காட்டி படம் முழுவதும் உணர்ச்சிமயம் காட்டியிருக்கிறார் சூர்யா. 

அதுவும் 1070 காலகட்டத்தில் ஒரு பழங்குடிகளின் இனத் தலைவரின் மகனாக தங்கள் இனத்தை அழிக்க வந்த கருங்காலி நட்டியை தண்டிக்கும்போது காட்டும் கண்டிப்பில் ஆகட்டும், அதன் விளைவாக நட்டியின் மகன் அனாதையாக, அவனை அக்கணமே தந்தையாகத் தத்தெடுத்துக் கொள்ளும் பாசத்தில் ஆகட்டும், அத்தனைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தும், அவனே ஒரு கட்டத்தில் தன்னைக் கொல்ல முயலும் போது கண்களில் காட்டும் பரிவு கலந்த ஏமாற்றத்தில் ஆகட்டும், அந்தச் சிறுவனுக்காக தன் இனத்தைத் துறந்து காட்டுக்குள் தனிமைப்பட்டுப் போவதிலாகட்டும்… நடிகர் திலகத்தின் மிச்சமாக நடிப்பைக் கொட்டி இருக்கிறார் சூர்யா.

அவர் மட்டும் அல்லாமல் எல்லா பாத்திரங்களும் படம் நெடுக போடும் காட்டுக் கத்தலை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆயிரம் வருடங்கள் பயணப்படும் இத்தனை நீளமான படத்தில் அவருக்கு ஒரு சரியான ஜோடி இல்லாமல் இருப்பது குறைதான். தற்காலத்தில் நடக்கும் கதையில் மட்டும் திஷா பதானி ஒரு ஆறுதலாக கொஞ்ச நேரம் வந்து போகிறார்.

படம் நெடுக சூர்யாவே ஆக்கிரமித்திருப்பதில் வில்லனாக வந்திருக்கும் பாபி தியோலின் நடிப்புக்குப் பெரிய பங்கு இல்லை.

நட்டி, போஸ் வெங்கட், பிரேம் உள்ளிட்ட எல்லோருக்கும் நெகடிவ் வேடங்கள்தான். அவர்களில் கருணாஸ் மட்டும் பாசிட்டிவாக வருகிறார். 

கே எஸ் ரவிக்குமார், கோவை சரளா இருவரும் வழக்கமாகப் பேசும் கோவைத் தமிழை மாற்றி கோவா தமிழ் பேச வைத்திருப்பது ரசிக்கும்படி இல்லை.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி இருவராலும் நம்மைச் சிரிக்க வைக்க முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான்.

வெற்றியின் ஒளிப்பதிவு உச்சம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தேவைக்கு அதிகம் என்கிற நிலையில் கலை இயக்கம், அனிமேஷன் உள்ளிட்ட நுட்பங்கள் தமிழுக்கு உச்சபட்சம்….

அதிலும் முழுமையான முதல் இந்திய 3டி படமாக வந்திருப்பது அனைத்து இந்திய ரசிகர்களையும் ஈர்க்கும். 

கடைசி கடைசியாக கார்த்தியும் உள்ளே வந்து அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறார்.

சத்தத்தை மட்டும் குறைத்திருந்தால் சவுண்டான படமாக இருந்திருக்கும். 

கங்குவா – தொழில்நுட்ப மிரட்டல்..!

 

Read More

TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது

by on November 13, 2024 0

வலுவான வளர்ச்சியின் மத்தியில் TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது • 31 மாவட்டங்களில் ஒரு வலுவான இருப்புடன் மாநிலம் முழுவதும் 1000 மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க். • 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சுகாதாரப் பிரிவில் 250% வளர்ச்சியைக் கண்டுள்ளது. • 85% தொழில் சராசரிக்கு எதிராக நிதியாண்டு 24 இல் 90.16% இன் மிக உயர்ந்த கோரல் தீர்வு (முடித்து வைக்கப்பட்ட கோரல் தொகை). […]

Read More

கஸ்தூரி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவ.14 க்கு ஒத்திவைப்பு

by on November 13, 2024 0

சென்னையில் பிராமணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் […]

Read More

காதலை மையமாகக் கொண்ட ஒரு என்டர்டெய்னர்தான் நேசிப்பாயா படம் – இயக்குனர் விஷ்ணுவர்தன்

by on November 9, 2024 0

நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக அவரது மகளும் ஆகாஷின் மனைவியுமான சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ […]

Read More

மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் பிரபாஸ்

by on November 8, 2024 0

*ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்* திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, இதுவரையிலான திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு […]

Read More

மன்னிப்பின் உயர்வைப் பேசும் படம் கங்குவா..! – சூர்யா

by on November 7, 2024 0

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது! ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை […]

Read More
CLOSE
CLOSE