July 5, 2026
  • July 5, 2026

மாமன் திரைப்பட விமர்சனம்

by on May 17, 2025 0

தலைப்பே பாதி கதையைச் சொல்லிவிட்டது. அக்கா சுவாசிகா மீது உயிரையே வைத்திருக்கிறார் தம்பியாக வரும் நாயகன் சூரி.  திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் சுவாசிகாவுக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதால் அவர் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாகி, ஒரு வழியாகக் கருவுறுகிறார்.  அவருக்கு ஆண் குழந்தை பிறக்க… தாய் மாமன் ஆகும் சூரி அந்த குழந்தையுடன் பிரிக்க இயலாத பாசப்பிணைப்பில் கட்டுண்டு கிடக்க அதுவே ஒரு கட்டத்தில் பிரச்சனை ஆகிறது.  இந்நிலையில் சுவாசிகாவுக்கு மருத்துவம் பார்த்த […]

Read More

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட விமர்சனம்

by on May 17, 2025 0

சினிமா விமர்சனங்களால் சந்தானமும் இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்தும் எவ்வளவு காண்டாகி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கும் படம். அதை கொஞ்சம் பேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார்கள் அந்த விஷயத்தையே கருப்பொருளாக எடுத்துக்கொண்டு சந்தானமும் இதில் விமர்சனம் செய்யும் யூடியூபர் ஆகி இருக்கிறார்.  இவரைப் போன்ற சினிமாவை கிழி கிழி என்று கிழிக்கும் விமர்சகர்களை ஒரு மர்ம அழைப்பு அனாமதேய தியேட்டருக்கு அழைக்கிறது. அங்கே சென்றவர்களை பாடாய்ப் படுத்தி  போட்டுத் தள்ளுகிறது.  அதன்படியே சந்தானம் குடும்பத்திற்கும் அழைப்பு வர […]

Read More

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12 ஆம் தேதி வெளியாகிறது..!

by on May 17, 2025 0

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார். இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் […]

Read More

ஜோரா கைய தட்டுங்க திரைப்பட விமர்சனம்

by on May 16, 2025 0

வழக்கமாக காமெடி படங்களிலேயே சீரியஸாக நடித்து வரும் யோகி பாபு உண்மையிலேயே சீரியஸாக நடித்திருக்கும் படம் இது.  காலம் சென்ற அப்பா பிரபல மேஜிக் கலைஞராக இருக்க அவரைப் போலவே புகழப்பட வேண்டும் என்கிற நோக்கில் தானும் மேஜிக் கலைஞராக வர ஆசைப்படுகிறார் யோகி பாபு.  ஆனால் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு தவறு ஏற்பட்ட விட அதன் காரணமாக மக்களாலும் போலீசாலும் அடித்து விரட்டப்படுகிறார். போதாக்குறைக்கு அவர் வனப்பகுதியில் தங்கி இருக்கும் ஆளரவமற்ற இடத்தில் […]

Read More

புற்றுநோய் சிகிச்சையில் CAR-T செல் தெரபியை அறிமுகப்படுத்தும் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை

by on May 15, 2025 0

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சிகர முன்னேற்றம்! சென்னை, 15th May 2025 — சென்னை மாநகரில் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு பெரிய முன்னேற்றமான சிமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி-செல் (CAR-T) சிகிச்சை திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இந்த அறிமுகத்தின் மூலம் குறிப்பிட்ட சில இரத்தப் புற்றுநோய்களுக்கு மேம்பட்ட வடிவிலான நோய் எதிர்ப்பு சிகிச்சையை இந்தியாவில் வழங்கும் வெகுசில மருத்துவமனைகள் பட்டியலில் ஒன்றாக காவேரி […]

Read More

லெவன் திரைப்பட விமர்சனம்

by on May 15, 2025 0

சமீப காலமாகவே தொடர் கொலைகள் நடப்பதும், அதைச் செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதுமான கதைகள் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆன இந்தப் படத்தில் என்ன புதுமை என்பதைப் பார்க்கலாம். வங்கிக் கொள்ளை ஒன்றில் திறமையாக துப்பறிந்த இணை கமிஷனருக்கு அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலை கேஸை துப்பறிய உத்தரவிடுகிறார் போலீஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன்.  ஒரே மாதிரியாக ஒருவரைக் கொன்று அடையாளம் தெரியாமல் ஏரிக்கும் அந்தக் கேஸ் போலீசுக்கு […]

Read More

தி வெர்டிக்ட் திரைப்பட முன்னோட்ட விழாவில் தன் இளமை ரகசியத்தை உடைத்த சுகாசினி..!

by on May 14, 2025 0

வரலட்சுமியின் நடிப்பைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்கள் : ‘தி வெர்டிக்ட் ‘ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட தகவல்! கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்திற்கு ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் […]

Read More

என் படங்களில் அதிகபட்ச வசூல் பெற்றது டூரிஸ்ட் ஃபேமிலிதான்..! – சசிகுமார்

by on May 14, 2025 0

*’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் […]

Read More

வெங்கட் பிரபு – ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட ‘மெட்ராஸ் மேட்னி ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

by on May 14, 2025 0

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இயக்குநர் […]

Read More

நரி வேட்டை திரைப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்..!

by on May 13, 2025 0

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘நரிவேட்டை!’ டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது; தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் மற்றும் ஃப்யூச்சர் ரன்அப் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் வருகிற மே 23-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக […]

Read More
CLOSE
CLOSE