January 16, 2025
  • January 16, 2025

அமையவிருப்பது பசுமை வழிச்சாலை அல்ல பசுமை அழிப்புச் சாலை – கொதிக்கும் இயக்குநர்

by on August 1, 2018 0

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.    அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜெயப்பிரகாஷ் இசையமைக்கிறார்.   இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு […]

Read More

முதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

by on July 31, 2018 0

சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து… “அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் […]

Read More

தெலங்கானாவில் அதிக விலை திரையரங்குகளுக்கு அபராதம், சிறைத் தண்டனை

by on July 30, 2018 0

இப்போதைய சினிமா ரசிகர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதே திரையரங்குக் கட்டணம்தான். டிக்கெட் கட்டணத்தைவிட கேன்டீன் பொருள்கள் திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதுதான் அநியாயயமாக இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை. ஆனால், இப்படி தாறுமாறான விலையில் தியேட்டர்களில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்றால் அதற்கு அபராதம், சிறை தண்டனை […]

Read More

ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடும் சவால்

by on July 30, 2018 0

சினிமா பிரபலங்களைப் பற்றிய பாலியல் புகார்கள் கூறிவரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்ப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ்ப்பிரபலங்களும் அடங்குவர். இதில் சுந்தர்.சி மட்டும் இதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, மற்றவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் மற்றும் சமூக சேவகரான ராகவா லாரன்ஸ் நேற்று ஸ்ரீரெட்டி புகாருக்கு பதிலாக ஒரு அறிக்கை விடுத்தார். அதிலிருந்து… “நான் இந்தப் புகாரை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. ஆனால், […]

Read More

வஞ்சகர் உலகம் படத்துக்காக சாம் சிஎஸ் இசையில் பாடிய யுவன்

by on July 29, 2018 0

சமீபத்தில் படத்துக்குப் படம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் தன் தனித்திறமையால் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் சாம் சிஎஸ். ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று வரிசையாக அவர் இசைத்த படங்களே அதற்கு உதாரணம். இப்போது அந்த வரிசையில் மாறுபட்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் ‘வஞ்சகர் உலகம்’ படத்துக்கு தன் இசைப்பூச்சால் மெருகூட்டி வருகிறார் சாம் சிஎஸ். இந்தப்படத்தில் ஒரு ரொமான்டிக்க்கான மெல்டி பாடல் வருகிறது. அதற்கு யாரைப் பாடவைக்கலாம் என்று யோசித்தவருக்கு சட்டென்று யுவன் […]

Read More

கஜினிகாந்த் படத்தில் வேலை வாங்கிய சாயிஷா – சந்தோஷ் பி.ஜெயக்குமார்

by on July 29, 2018 0

‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ‘கஜினிகாந்த்’தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்றதும் கேட்டவர் எல்லோரின் புருவங்களும் ஒருகணம் உயரும். ‘அடல்ட் காமெடி’ என்று குடும்பத்தினர் முகம் சுளிக்கும் படங்களைத் தொடர்ந்து எடுத்து வருபவர் என்பதால் எல்லோர் மனத்திலும் தோன்றும் ஒரே கேள்வி. “இந்தப் படமும் அந்த வகையறாதானா..?” அதற்கு பதில் சொன்னார் சந்தோஷ், ‘கஜினிகாந்த்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்… “ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனத்துக்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் […]

Read More

ஜுங்கா விமர்சனம்

by on July 28, 2018 0

கோலிவுட்டில் ‘ஹாரர் ஜேனர்’ என்கிற ஆவி பறக்கும் கதைகள் ஓய்ந்து இது ‘டான்’கள் டாலடிக்கும் (டாவடிக்கும்..?) ‘டார்க் காமெடி’ சீசன். அதில் சின்னதாய் ‘சூது கவ்வும்’ படத்தில் வெற்றியைக் கவ்வி விட்ட மகிழ்ச்சியில் ‘பெரிசாய்’ பண்ண விஜய் சேதுபதி ஆசைப்பட்டிருக்கும் ‘படா’ படம் இது. பொள்ளாச்சியில் தானுண்டு தன் கண்டக்டர் வேலை உண்டு என்று ஜாலியாக ஒரு தெலுங்குப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு அந்தப் பெண்ணாலேயே ஒரு சண்டையில் பராக்கிரமத்தைக் காட்ட வேண்டிவர, அதனால் […]

Read More
CLOSE
CLOSE