October 11, 2026
  • October 11, 2026

தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் இங்கிலாந்தில் தயாராகிறது

by on July 19, 2019 0

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ‘ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ தனது 18வது படைப்பாக தயாரிக்கிறது. ஒரு ‘கேங்ஸ்டர் திரில்லர்’ வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் […]

Read More

குறும்பட பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு – ஷார்ட் ஃப்ளிக்ஸ் செயலி

by on July 18, 2019 0

‘நெட்ஃபிளிக்ஸ்’ (NetFlix) கேள்விப்பட்டிருப்பீர்கள்… அதைப்போலவே புதிதாக குறும்படங்களுக்கான ஒரு செயலி ‘ஷார்ட் ஃப்ளிக்ஸ்’ (ShortFlix) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Youtube-ல் சென்று குறும்படங்களைத் தேடி கண்டுபிடுத்து பார்ப்பதற்கு பதில் இந்த Shortflix செயலி மூலம் மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே தரமான குறும்படங்களை கைப்பேசி வாயிலாக கண்டு ரசிக்கலாம். குறும்பட இயக்குனர் அல்லது அந்தக் குழுவினர் அவர்களது படைப்புகளை Shortflix-ன் வலைதள முகவரியிலோ அல்லது நேரடியாகவோ சென்று சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட குறும்படங்கள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் அவை Shortflix செயலியில் […]

Read More

சரவண பவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

by on July 18, 2019 0

சரவண பவன் ஓட்டல்களின் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. முன்னதாக, சரவண பவன் ராஜகோபாலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். அப்போது நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே ராஜகோபாலின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். […]

Read More

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தம் – மோடி வரவேற்பு

by on July 17, 2019 0

இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்று பாகிஸ்தானின் குற்றச்சட்டை மறுத்ததுடன். ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை […]

Read More

எப்படி இருந்த நான் – ராய் லக்ஷ்மி புதிய அவதாரம்

by on July 17, 2019 0

நடிகர் நடிகைகளுக்கு பெரிய தலைவலியாக இருப்பது அவ்வப்போது பெருத்து விடும் உடல்தான். பிறகு பாடுபட்டு அதைக் குறைக்க முயற்சி எடுப்பார்கள். அப்படி இன்றைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பெருமுயற்சி செய்து குறைத்த தன் ‘ஸ்லிம் ஃபிட்’ உடலை… அதுவும் டூ பீஸ் உடையில் காட்டி தன் ரசிகர்களைக் குளிர வைத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி. அந்தப்படத்துக்கான விளக்கத்தில் ‘கடுமையாக உழைத்து என் பிகினி உடலை நான் அடைந்து விட்டேன். நான் முன்பு எப்படி இருந்தேன் என்று இப்போது நினைத்தே […]

Read More

விவிஐபிக்கள் தயவில் அத்திவரதர் தரிசனம் வீடியோ

by on July 17, 2019 0

காஞ்சிபுரம் அத்தி வரதரை பொது மக்களிலிருந்து விவிஐபிக்கள் வரை தினமும் சென்று தரிசித்து வருகிறார்கள். அதில் முக்கிய விவிஐபி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.  கடந்த ஜூலை 12ம் தேதி அவர் அத்திவரதரை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவரை வீடியோ படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதில் அந்த வீடியோ வெளியானது. தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர் குடும்பங்களும் சென்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். அதில் அவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகளில் நாமும் […]

Read More

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் வாழ் படப்பிடிப்பு நிறைவடைந்தது

by on July 16, 2019 0

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. பர்ஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை சூழ் குகையின்ஒளி வீச்சில் படத்தின் கதாநாயகனின் நிழல் நின்றுகொண்டிருப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது. படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன […]

Read More

ஆளப் போறான் தமிழன் போல் பிகில் சிங்கப் பெண்ணே லீக்கானது

by on July 16, 2019 0

அட்லீ – விஜய் கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி வரும் படம் ‘பிகில்’. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ‘மைக்கேல்’ மற்றும் ‘பிகில்’ என்று அப்பா மகனாக நடித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா, யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் […]

Read More

கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏஆர் ரஹ்மான்

by on July 16, 2019 0

‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்காக கமல் நடித்துக்கொண்டிருந்த இன்னொரு படமான ‘சபாஷ் நாயுடு’ தொடர்வதில் சிக்கல் இருந்தது. அதைத் தொடரவே முடியாத நிலையில் அவர்களுக்காக இன்னொரு புதிய படத்தை செய்து தருவது பற்றி கமல் தெரிவிக்க, ‘லைகா’வும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அது கமல் முன்னமே அறிவித்த ‘தலைவன் இருக்கின்றான்’ படம்தான் என்பது தகவல். இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனமும் தயாரிக்கவிருக்கிறது. இது ஒரு பெரிய […]

Read More
CLOSE
CLOSE