January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வஞ்சகர் உலகம் படத்துக்காக சாம் சிஎஸ் இசையில் பாடிய யுவன்
July 29, 2018

வஞ்சகர் உலகம் படத்துக்காக சாம் சிஎஸ் இசையில் பாடிய யுவன்

By 0 1055 Views

சமீபத்தில் படத்துக்குப் படம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் தன் தனித்திறமையால் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் சாம் சிஎஸ். ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று வரிசையாக அவர் இசைத்த படங்களே அதற்கு உதாரணம்.

இப்போது அந்த வரிசையில் மாறுபட்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் ‘வஞ்சகர் உலகம்’ படத்துக்கு தன் இசைப்பூச்சால் மெருகூட்டி வருகிறார் சாம் சிஎஸ். இந்தப்படத்தில் ஒரு ரொமான்டிக்க்கான மெல்டி பாடல் வருகிறது. அதற்கு யாரைப் பாடவைக்கலாம் என்று யோசித்தவருக்கு சட்டென்று யுவன் நினைவுக்கு வர, அவரிடம் கேட்டிருக்கிறார்.

யுவனும் யோசிக்காமல் ஓகே சொல்லி பாடிக்கொடுக்க, அந்தப்பாடல் சாம் நினைதத்து போல்வே வர, யுவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறார் சாம் சிஎஸ். விரைவில் வெளியாகவிருக்கின்றன ‘வஞ்சகர் உலகம்’ பாடல்கள்.

உலகம் வேண்டுமானால் வஞ்சகர்களால் நிறைந்திருக்கலாம். ஆனால், இசை உலகம் யுவன் போன்ற நல்ல மனதுக்காரர்களால் நிரம்பியிருக்கிறது.