October 14, 2026
  • October 14, 2026

எப் ஐ ஆர் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2022 0

இந்து மதவாதிகளின் “ஜெய் ஸ்ரீராம்” முற்றுகைக்கு எதிராக இந்திய இஸ்லாம் மாணவி எழுப்பிய “அல்லாஹு அக்பர்…” முழக்கம் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் எதிரோலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பொருத்தமாக வெளியாகி இருக்கும் படம் இது. இந்திய முஸ்லிம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் போலப் பார்க்கும் பார்வைக்கு எதிராக முழக்கம் இடுகிறது இந்தப்படம். உலகை அச்சுறுத்தி வரும் ஐஸிஸ் அமைப்பு இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நடத்தவிருக்கும் பேரழிவை இந்திய முஸ்லிம் ஒருவர் எப்படித் தடுத்து நிறுத்துகிறார் என்கிற கதை. அதைத் […]

Read More

கடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்

by on February 10, 2022 0

விவசாயத்தைக் காக்கவென்று அநேக படங்கள் சமீபத்தில் தமிழில் வரிசைக் கட்டியிருக்கின்றன. ஆனால் துருத்தலும், மிகையும் இன்றி அது குறித்த சரியான புரிதலுடன் எழுதப்பட்டு வந்திருக்கும் முதல் படம் இதுதான் எனலாம். விவசாயத்தின் மற்றும் விவசாயியின் வாழ்க்கை குறித்தும் சினிமாத்தனம் கலக்காமல், பிரசார நெடி இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்ட கடைசிப்படமாகவும் இது இருக்கக் கூடும். படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பவரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ என்று படத்தில் சுட்டிக் காட்டுவது கிட்டத்தட்ட வழிக்கொழியும் நிலையில் […]

Read More

மகான் திரைப்பட விமர்சனம்

by on February 10, 2022 0

வழக்கமாக சீயான் விக்ரம் நடிக்கும் படங்கள் சினிமா ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும். இந்தப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் அவருடன் நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இரு மடங்காகி இருக்கிறது. கொள்கையில்லாமல் இஷ்டப்படி வாழ்வது எப்படி குற்றமோ அதேபோல் கொள்கையுடன் நடக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர் நலன் கெட நடப்பதும் குற்றம் என்ற கருத்தை இதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். காந்தியவாதியான ஆடுகளம் நரேன் தன் மகன் விக்ரமுக்கு ‘காந்தி மகான்’ என்று பெயரிட்டு வளர்க்க அவரோ […]

Read More

மூன்று நாயகிகளுடன் அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம் இறுதிக் கட்டத்தில்…

by on February 7, 2022 0

Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” ! பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து […]

Read More

யாரோ படத்தின் விமர்சனம்

by on February 6, 2022 0

வழக்கமாக ஆவி கதைகள் எனப்படும் ஹாரர் வகைப் படங்கள் எல்லாம் சஸ்பென்ஸ் திரில்லராக ஆரம்பித்து கடைசியில் ஆவியில் வந்து முடியும். ஆனால் இந்தப்படத்தில் ஒரு ஹாரர் படம் போல ஆரம்பித்து கடைசியில் சஸ்பென்ஸ் திரில்லராக முடித்திருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய்.   படம் முழுக்க நிறைந்து இருக்கிறார் அறிமுக நாயகன் வெங்கட் ரெட்டி. முதல் பட நாயகனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது என்றிருக்க இவரே படத்தின் தயாரிப்பாளராகவும் இருப்பதால் அது வாய்த்திருக்கிறது என்று சொல்லலாம். […]

Read More

ஜனனி ஐயர் சண்டைக்கு பயந்து நாயகி ஆக்கிய இயக்குனர்

by on February 5, 2022 0

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் […]

Read More

சிம்புவை நடிக்க வைத்த ஜெயின் குடும்ப ஹீரோ கிஷன் ஜெயிக்க வேண்டும் – டி.ஆர்

by on February 5, 2022 0

மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.  ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.  கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார்.  உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.  இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு […]

Read More

எப்ஐஆர் படத் தயாரிப்பில் விஷ்ணு விஷாலுக்கு கிடைத்த தங்கை

by on February 4, 2022 0

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.  இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் […]

Read More

சாயம் திரைப்பட விமர்சனம்

by on February 3, 2022 0

கொஞ்ச காலமாகவே தமிழ் சினிமாவில் சாதிப்பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் தென் மாவட்டப் பகுதியில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது. ஊர்ப் பெரிய மனிதரான பொன்வண்ணனும், ஆசிரியர் இளவரசுவும் நல்லது செய்து தங்கள் ஊரில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் மகன்களும் நல்ல நண்பர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பொன்வண்ணன் மகனாக அபி சரவணன் வருகிறார். பொன்வண்ணனின் உறவினரான தென்னவனும், அவர் தம்பி போஸ் வெங்கட்டும் […]

Read More
CLOSE
CLOSE