July 3, 2026
  • July 3, 2026

ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்

by on January 26, 2024 0

திறமைக்கும், ‘தகுதி’க்கும் இடையில் நிலவும் ஏற்றத் தாழ்வு அரசியல்தான் கதைக்களம். அதை ஒரு 30 வருடங்கள் முன்னோக்கிப் புரட்டிப் பார்த்து நாம் அதிகம் அறிந்த / அறிந்திடாத அரக்கோணம் பகுதிகளில் வைத்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார். அங்கே, ஊருக்குள்ளும், காலனிக்குள்ளும் தலா ஒரு கிரிக்கெட் டீம் இருக்க, இருவருக்குள்ளும் நிலவும் பேதம் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கிறது… அது மட்டும்தான் கதையா என்றால்… இல்லை, அதற்கு மேலும் நிலவும் அடுத்த அடுக்கின் பேதங்களையும் திறமையால் உடைக்க உரக்கச் […]

Read More

சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்

by on January 25, 2024 0

“மயிரைக் கட்டி மலையை இழுப்பது…” என்பார்கள். அப்படி ஒரு முயற்சியை ஆர்.ஜே. பாலாஜியை வைத்து இயக்குனர் கோகுல் செய்திருக்கிறார். எதற்காக மலையைப் போய் மயிரில் கட்டி இழுக்க வேண்டும் என்றால், ‘வந்தால் மலை… போனால் …’ என்கிற காரணத்தினால்தான். ஆனாலும், இதில் இவர்கள் சொல்லியிருப்பது எதைக் கட்டி இழுத்தாலும் அர்ப்பணிப்பும், கொள்கையில் உறுதியும் இருந்தால் மலை வந்தே ஆகும் என்பதைத்தான். பால்ய பருவத்தில் மனதில் பதியும் ஆசைகள் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்கும். அப்படித் தங்கள் ஊரில் […]

Read More

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘டீன்ஸ்’ வெளிவருவதற்கு முன்பே படைத்த உலக சாதனை

by on January 25, 2024 0

*இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்* நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர். இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. […]

Read More

முடக்கறுத்தான் திரைப்பட விமர்சனம்

by on January 25, 2024 0

கொரோனா காலகட்டத்தில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் இது. சோகங்களில் கொடுமையானது புத்திர சோகம் என்பார்கள். பெற்ற குழந்தைகள் இறந்து போவதை விட கொடுமையான விஷயம் அவர்கள் காணாமல் போவது தான். அப்படி குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பலை பற்றிய கதை இது. அன்றாடம் சாலையில் பயணிக்கும் போது ஒவ்வொரு சிக்னலிலும் கையில் வாடிய குழந்தையுடன் ஒரு பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். […]

Read More

நட்புக்காக கிரிக்கெட் விளையாடிய ப்ளூ ஸ்டார் சிங்கப்பூர் சலூன் பட குழு

by on January 24, 2024 0

*புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர் நட்புக்காக விளையாடிய கிரிக்கெட்* இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும், நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஒரே நேரத்தில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடுவது தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. […]

Read More

பிரசாந்த் வர்மாவின் ஜெய் ஹனுமான் முன் தயாரிப்பு பணிகள் தொடக்கம்

by on January 23, 2024 0

*இயக்குநர் பிரசாந்த் வர்மா, ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு இந்த அற்புத சந்தர்ப்பத்தில், PVCU யுனிவர்ஸிலிருந்து மற்றொரு காவிய, சாகசத்திரைப்படமான, “ஜெய் ஹனுமான்” படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளார் !!* ராமர் கோவில் திறப்பு நன்நாளில், PVCU யுனிவர்ஸிலிருந்து, அடுத்த அதிரடியாக “ஜெய் ஹனுமான்” பட முன் தயாரிப்பு பணிகள் துவக்கம் !! பிரசாந்த் வர்மா ஜெய் ஹனுமான் எனும் அடுத்த படத்தின் தலைப்பை தற்பொது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின் முடிவில் அறிவித்திருந்தார். […]

Read More

தமிழ் தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by on January 23, 2024 0

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக  இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார். அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தப் படம் இருக்கிறது . தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி […]

Read More

கிரிக்கெட்டை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ப்ளூ ஸ்டார் படத்தை ரசிக்கலாம் – பிருத்வி பாண்டியராஜன்

by on January 22, 2024 0

நடிகர் பிருத்வி பாண்டியராஜன் இப்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ப்ளூ ஸ்டார் படம் மூலம் மீண்டும் வருகிறார். ப்ளூ ஸ்டாரில் தனது இரண்டு காதல்களான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை இணைத்து நடித்துள்ளார். ஜனவரி 25, 2024 அன்று வெளியாகும் இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் மற்றும் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் குறித்து பிருத்வி கூறுகையில், “கிரிக்கெட்டை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைவரையும் கவரும் ஒரு தனித்துவமான படம் ப்ளூ ஸ்டார் […]

Read More

குழந்தை ராமரை வரவேற்க ராம ஜோதி ஏற்றுங்கள் – பிரதமர் மோடி

by on January 22, 2024 0

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா திங்கள்கிழமை (ஜனவரி 22) வெகு விமரிசையாக நடந்தது. 51 அங்குல உயர குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேரடியாகக் காண திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சந்திரங்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாதுக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். பகல் 12:29:03 மணியில் இருந்து 12.30:35 மணிக்குள் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இது தனிச்சிறப்பான முகூர்த்த நேரம் […]

Read More

கீர்த்தி பாண்டியன் மிக தைரியமாகப் பேசி இருக்கிறார் – ப்ளூ ஸ்டார் விழாவில் பா.ரஞ்சித்

by on January 22, 2024 0

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. […]

Read More
CLOSE
CLOSE