July 6, 2026
  • July 6, 2026

‘ஜெயிலர்’, ‘லியோ’ வரிசையில் ‘லீடரு’ம் வெற்றிப் படமாகும்..! – லெஜெண்ட் சரவணன் நம்பிக்கை

by on March 31, 2026 0

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு..!* லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் […]

Read More

காட்டான் வெப் தொடர் விமர்சனம்

by on March 30, 2026 0

தேனிக்கு அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் எந்த வழக்குப்பதிவும் இல்லாததால் அங்கு இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று மூடப்படவிருக்கிறது.  ஆனால் அங்கு பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் காவலர் வடிவேலு முருகனுக்கு சில சொந்த காரணங்களால் அங்கிருந்து செல்வதில் விருப்பமில்லை. ஆனால் அதே ஸ்டேஷனில் பணிபுரியும் சிங்கம்புலிக்கு வெளியூர் போனால் நல்ல காசு பார்க்கலாம் என்கிற தவிப்பு இருக்கிறது.  இந்நிலையில் ஒரு நாள் காலையில் திடீரென்று முண்டமிலலாத தலை ஒன்று மைதானத்தில் கிடைக்க… போலீஸ் […]

Read More

நடிகை ரோஜா நடுவராகும் விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 – இது இனி ‘டபுள் ட்ரபுள்..!’

by on March 29, 2026 0

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் கோமாளி’ ஷோவை புதிய ஃபார்மட்டில் தரப்போகிறது விஜய் டிவி. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு’ என்று ரசிகர்கள் எண்ணலாம். அதையும் விட நல்லா செய்ய நினைக்கிறது விஜய் டிவி. இனி இந்த ஷோவில் நடுவராக இணைகிறார் […]

Read More

ப்ராஜெக்ட் ஹெயில் மேரி ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

by on March 29, 2026 0

‘தி மார்ஷியன்’ நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் எழுதிய ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவலாகும். அதை திரைப்படத்துக்கு ஏற்றவாறு திரை கதையாக Drew Goddard எழுத, Phil Lord மற்றும் Christopher Miller இப்படத்தைத் தயாரித்து இயக்கி இருக்கிறார்கள். கதை இதுதான்… சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியை அழிக்க, அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) விண்வெளிக்கு […]

Read More

சாத்தான் தி டார்க் திரைப்பட விமர்சனம்

by on March 28, 2026 0

சமீபத்தில் இப்படி ஒரு ஹாரர் படம் பார்த்ததில்லை. வழக்கமாக இது போன்ற ஹாரர் படங்களில் ஒரு ஆவி யாரையாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும். இதில் அந்த வேலையை தெய்வத்துக்கு எதிரான சாத்தான் செய்கிறது.  இந்தியாவை மேலைநாட்டவர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே இது போன்ற சாத்தான் வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்து வந்ததை தொடக்கத்தில் கதையாகச் சொல்கிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் சாத்தானை வழிபட்டு, இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நிருபித்ததாக சொல்லப்படும் ஒரு புத்தகம், அதை பயன்படுத்திய மாந்திரீகரோடு […]

Read More

நீ forever திரைப்பட விமர்சனம்

by on March 28, 2026 0

காதலில் என்ன ‘நல்ல காதல், கள்ளக் காதல்..?’ என்பார்கள். எல்லாமே கள்ளம்தான். அந்த வகையில் இந்த படத்தில் ஏமாற்றிக் காதலித்த இருவர் என்ன ஆனார்கள் என்பதை கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி.  பெற்ற மகள் காதலித்து அவளது வாழ்க்கை வீணாகப் போனதால், கணவனை விட்டு வீடு திரும்பிய அவளை தன் வசம் வைத்து காப்பாற்றுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த பெரிய மனிதரான ஒய்.ஜி.மகேந்திரன்.  அதனால் பேத்தியையும், பேரனையும்  சிறுவயதில் இருந்து கண்டிப்பாக வளர்க்கிறார். காதல் உள்ளிட்ட நவீனங்கள் […]

Read More

‘கார்மேனி செல்வம்’ படத்தில் பணியாற்றியது இறைவன் அருள்..! – சமுத்திரக்கனி

by on March 26, 2026 0

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் […]

Read More

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும்..! – விஜய் சேதுபதி

by on March 26, 2026 0

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’ பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது […]

Read More

ஹேப்பி ராஜ் திரைப்பட விமர்சனம்

by on March 25, 2026 0

பாரம்பரிய மனித மதிப்புகளை… குறிப்பாக பெற்றோரின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்தும் படம். அதை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன்.   கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்த ஜார்ஜ் மரியான், தன் மகன் ஜீவி பிரகாஷ் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக மகனுக்கு ஹேப்பி என்ற பெயர் வைத்தாலும் அவரைத் தன் கைக்குள்ளேயே வைத்து வளர்க்கிறார். அதுவே ஜீவியின் மகிழ்ச்சியை கெடுக்கிறது.   அவரது முதல் காதலும் தோல்வியடைய, அதற்குக் காரணம் பெற்றோரின் நாகரீகமின்மையே காரணம் […]

Read More

அரசியலில் முற்றுப்புள்ளி என்பது கிடையாது – கமல்ஹாசன்

by on March 25, 2026 0

பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாகும். பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழகத்தை மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து காக்கும் எண்ணத்தில், தமிழக மக்களின் வளர்ச்சி கருதியும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; […]

Read More
CLOSE
CLOSE