October 15, 2025
  • October 15, 2025
Breaking News
September 5, 2019

லொஸ்லியாவை வைத்து சேரனின் மாஸ்டர் பிளான்

By 0 990 Views

சமூகத்துக்குத் தேவையற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதில் சேரன் என்ற நல்ல இயக்குநரும் சிக்கினாரே என்ற கவலைதான் பல ஆரோக்கிய சிந்தனையாளர்களுக்கும்.

ஆனால், அவர் பட்ட கடன்களை அடைக்கவே அப்படி முடிவெடுத்தார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதிலிருந்து மதுமிதா வெளியே வந்தவுடனேயே அந்நிகழ்ச்சிக்கு எத்தனை லட்சங்கள் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது என்ற விஷயம் அதிகாரபூர்வமாகவே ஊர் உலகுக்குத் தெரிந்தது. 

70 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் சேரனே பிக்பாஸ் படத்தை வென்றால் மிகப்பெரிய தொகை அவர் கைக்கு வந்து கடன்களை செட்டில் செய்யும் திட்டம் அவருக்கு இருக்கலாம்.

அத்துடன் அங்கிருந்து வெளியே வந்த பிறகு விஜய் சேதுபதி படத்தை அவர் இயக்கவிருப்பதாக அவரே அறிவித்திருப்பதும் அவர் மாஸ்டர் பிளானுடன்தான் களம் இறங்கியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அந்தப்படத்தில் பிக்பாஸில் அவருடன் தங்கிப் புகழடைந்த லொஸ்லியாவை ஹீரோயினாக்கு திட்டமும் அவருக்கு இருக்கலாம் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள்.

எப்படியோ, பிக் பாஸ் வீட்டில் தங்கிய பழியை நல்ல படமொன்றைத் தந்து சேரன் தீர்த்துக் கொள்வாரானால் நல்லது..!