January 1, 2026
  • January 1, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • புதிய தயாரிப்பாளர் சங்கம் குறித்து பாரதிராஜா அவசர அறிக்கை
August 1, 2020

புதிய தயாரிப்பாளர் சங்கம் குறித்து பாரதிராஜா அவசர அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பெரு மக்களுக்கு..

அன்பான வணக்கம்

நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் .

அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தப் பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.

எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்டப் பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது

நன்றி.

அன்புடன்
பாரதிராஜா

01:08:2020
சென்னை 

Barathiraja statement about new producers association

Barathiraja statement about new producers association