September 20, 2026
  • September 20, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

மோடியிடம் சித்தராமையா 100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

by on May 7, 2018 0

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வழக்கறிஞர் உக்ரப்பா, பா.ஜ.க. தேசிய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்களை அனுப்பி வைத்துள்ளார். பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ்களின் நகலில் இருந்து:- ‘எனது கட்சிக்காரரான முதல் மந்திரி சித்தராமையா மீது தரக்குறைவான கருத்துக்களையும் பொய் கருத்துக்களையும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். சித்தராமையா மீது சுமத்தப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் […]

Read More

விஷாலும் அர்ஜுனும் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்- சமந்தா அக்கினேனி

by on May 6, 2018 0

‘இரும்புத்திரை’ மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தில் விஷாலுடன் ஜோடி போடும் நாயகி சமந்தா அக்கினேனி, படம் பற்றி பிரைவேட்டாகப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்… “நமக்கு இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவற்றை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அவற்றுக்கு நாம் அடிமை ஆவதுதான் தவறு. இதை எடுத்துக் கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இரும்புத்திரை இருக்கும். இந்தப் […]

Read More

ஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா

by on May 6, 2018 0

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சொனியாவும் வரும் 8ம்தேதி ஒரே நாளில் பிரச்சாரம் செய்கின்றனர். இந்நிலையில், பெலகாவியில் நேற்றைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றார். எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டினார். அத்துடன் நிற்காமல், யாரெல்லாம் […]

Read More

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த நீட் எப்படி..?

by on May 6, 2018 0

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் பேர் பங்கேற்றனர். வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், சென்றனர். இவர்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு சென்றனர். மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களுக்குச் சென்றனர். […]

Read More

யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்தனர்

by on May 4, 2018 0

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பாஜக அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திரசேகர் ராவைத் தொடர்ந்த சின்ஹாக்களின் […]

Read More

நீட் எழுத வெளிமாநிலம் செல்வோருக்கு பயணத்தொகையுடன் ரூ.1000 – தமிழக அரசு

by on May 4, 2018 0

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதிக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மாநில அளவில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் […]

Read More

அருள்நிதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படம்

by on May 4, 2018 0

உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் த்ரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் ‘இந்தப் படத்தின் முதல் ரசிகன் படத்தின் தயாரிப்பாளர் ‘ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு’தான். படத்தைப் பற்றி மகிழ்ச்சியோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறார் அவர். “முதலில் இயக்குனர் மு. மாறன் கதை சொன்னதைக் கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாகக் கொண்டு வந்ததிலும் மகிழ்ச்சி. […]

Read More