வாழ்க்கையிலிருந்து சினிமா எடுப்பது ஒரு வகை. சினிமா பார்த்து சினிமா எடுப்பது இன்னொரு வகை. இது இரண்டாம் வகைப்படம் என்று உணரவைக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். ஒவ்வொரு தாய்க்கும் தன் மகன் சீமத்துரைதான் – அவன் என்னதான் ஊரைச்சுற்றி பொறுப்பில்லாமல் அலைந்தாலும். அப்படித்தான் ஏழைத்தாயான விஜி சந்திரசேகரின் மகனாக கீதன் வருகிறார். அப்பா இல்லாத பிள்ளையாக வளரும் அவரை அம்மா செல்லமாக வளர்க்க, அதன் காரணமாகவே ஊரைச்சுற்றிக்கொண்டு லந்து பண்ணித்திரியும் அவருக்கும் சினிமா வழக்கப்படியே ஊர்ப் பெரியமனிதரின் […]
Read Moreநடிகனாக ஆகியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கோலிவுட்டில் புகுந்து, நினைத்தது போலவே ஷங்கர் படம் வரை நடித்துப் புகழ் பெற்றவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். டாக்டர் தொழில் உள்பட பல தொழில்கள் செய்துவந்த அவர் மீது சீட்டிங் வழக்குகள் பாய்ந்து சிறை சென்றவர்… அதிலும் திகார் வரை சென்று புகழ் (!) பெற்றவர். இந்நிலையில் அவரைக் காணவில்லை என்று அவர் மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறாராம். அதில் நண்பரைக் காணச் சென்ற […]
Read More‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான முதலிடத்தில் உள்ள நூறு பிரபலங்களையும் அவர்களது சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். சல்மான் கான் இந்த ஆண்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? மயக்கம் போட்டு விடாதீர்கள். அவரது ஆண்ரு வருமானம் ரூ.253.35 கோடியாம். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய […]
Read Moreசாகித்ய அகாடமி விருது இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதாகும். இது இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் உள்ளிட்டு பலவகையான எழுத்தாளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் 53 வயதான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றி அவர் எழுதிய சஞ்சாரம் நாவல் இந்த விருதை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தத் தேர்வு இன்று அறிவிக்கப்பட்டது. கடந்த 27 வருடங்களாக […]
Read Moreநாளை மறுநாள் 21ம்தேதியன்று தியேட்டர்காரர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கப் போகிறது. தனுஷின் ‘மாரி 2’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படங்கள் வெளியாகவிருக்க, இவற்றுடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘கனா’ படமும் களம் இறங்குகிறது. இந்தப்படங்களுக்கு முன்னாலேயே முடிவடைந்து தயாரிப்பாளர் சங்கத்திடம் வெளியிட அனுமதி பெற்று வெளியீட்டுத் தேதியும் அறிவித்த அதர்வாவின் ‘பூமராங்’ படமும் 21ம் தேதியன்று வெளியாகவிருந்தது. ஆனால், இப்போது ஒருவாரம் தள்ளி 28ம்தேதி அந்தப்படம் வெளியாகுமென்று படத்தின் தயாரிப்பாளரும், […]
Read Moreயார் மச்சம் எப்போது வேலை செய்யுமென்றே தெரியாது. இப்போதைக்கு விமலுக்கு மச்சம் உச்சத்தில் இருக்கிறது. இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விலை போனதும், அதிக தியேட்டர்களில் வெளியாவதுமான படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இம்மாதம் 7ம்தேதி வெளியாகும் படம் இது. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள்தான் வெளியாகுமாம். ஆனால் விமலின் இந்தப் படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக, விமல் கேரள மார்க்கெட்டை இந்தப்படத்தின் மூலம் குறி வைப்பது […]
Read More