September 24, 2026
  • September 24, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

நடிகர் அஜித் குமார் தந்தை மறைவு – அஜித் அறிக்கை

by on March 24, 2023 0

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி என்கிற பி.சுப்பிரமணி இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இது குறித்து அஜித் குமாரும் அவரது சகோதரர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு… எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் […]

Read More

இந்தியன் யோகா அசோசியேஷனுடன் இணைந்து நற்சிந்தனை வட்ட123-வது நிகழ்வு

by on March 24, 2023 0

உலக மகளி்ர் தினத்தை முன்னிட்டு நற்சிந்தனை வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு – இந்தியன் யோகா அசோசியேஷன் இணைந்து வழங்கிய நற்சிந்தனை வட்டத்தின் 123-வது மாதாந்திர நிகழ்ச்சி 19/03/2023 ஞாயிறன்று மாலை சென்னை, வளசரவாக்கம், காமகோடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீகாமகோடி தியான மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.  முன்னதாக நற்சிந்தனை வட்டத்தின் மகளிர் குழுவினர் குத்துவிளக்கேற்றிட, நற்சிந்தனை வட்டத்தின் யோகா இயக்குனர் திருமதி T.வள்ளி வரவேற்புரையும், நற்சிந்தனை வட்டத்தின் தலைவர் திரு.R.பாலன் தலைமை உரையும் நிகழ்த்தி விழாவினை […]

Read More

லைக்கா தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் தீராக் காதல்

by on March 24, 2023 0

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை […]

Read More

தேசிய பங்கு சந்தையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள்

by on March 23, 2023 0

*முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்* *லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை* தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு […]

Read More

பெட்டியை திறந்து வையுங்க காசு கொட்டும் – ஆர்.கண்ணனுக்கு கே.ராஜன் வாழ்த்து

by on March 21, 2023 0

இயக்குனர் ஆர்.கண்ணன் தன் மசாலா பிக்ஸ் சார்பாக எம்கேஆர்பி புரடக்ஷன்சுடன் இணைந்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. 1972-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற இந்த கிளாசிக் காமெடி படத்தை இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ப, மாற்றி ரீமேக் செய்திருக்கிறார். முந்தைய படத்தில் ஸ்ரீகாந்த், முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லஷ்மி முதலானோர் நடித்திருக்க, இந்தப்படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் ஷிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். […]

Read More

உலகம் முழுக்க பாடல்

by on March 21, 2023 0

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் “பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர […]

Read More

சிம்ஸ் மருத்துவமனையில் சிம்ஸ் ஜெனடிக் கிளினிக் தொடக்கம்

by on March 21, 2023 0

சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து சிம்ஸ் ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம சென்னை: 2023 மார்ச் 21 : சென்னையிலுள்ள பிரபல பன்னோக்கு மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை, லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (விரைவில் எம்ஃபைன் டயாக்னாஸ்டிக்ஸ்) ஆய்வகத்துடன் இணைந்து, தனது புத்தம் புதிய ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது மரபணு குறித்தும், சாத்தியமுள்ள சுகாதார அபாயங்கள் குறித்தும் புரிந்து கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு, மேம்பட்ட மரபணு பரிசோதனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் வழங்கப்படும். மரபணு […]

Read More

இனிமேல் பேச்சு இல்லை செயல் மட்டும்தான் – ‘பத்து தல’ சிம்பு

by on March 20, 2023 0

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் (18.03.2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் […]

Read More

2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் ஹைலைட்ஸ்

by on March 20, 2023 0

சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தார். இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். * மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராஜருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் * தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் * அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும் * சங்கமம் கலைவிழா, மேலும் 8 […]

Read More