November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • முழு சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்தார் தாணு – தனுஷ்
August 29, 2019

முழு சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்தார் தாணு – தனுஷ்

By 0 831 Views

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து…

“அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது.

வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது .

வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்கிறார்கள். மஞ்சுவாரியாரின் திறமை எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. அது இப்போது நிறைவேறியது.

‘கென்’னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவார். இப்போது இருக்கும் இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவியோடு வேலை செய்வது ஜாலியாக இருக்கும். மண் சார்ந்த இசையை இப்படத்திற்குக் கொடுத்திருக்கிறார்.

Asuran Audio Launch

Asuran Audio Launch

வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் ‘அசுரன்’தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். மக்கள்தான் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது…”

“நிறைய தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், முழு சம்பளத்தையும் படம் தொடங்குவதற்கு முன்பே தந்தார் தாணு சார்..!”

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதிலிருந்து,

“இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டது. வடசென்னை முடித்ததும் வடசென்னை 2 பண்ணலாமா என்று நினைத்தேன். பின் நானும் தனுஷும் இந்தப்படத்தை தொடங்க முடிவு செய்தோம். நாம எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு விசயத்தை நடத்திட முடியாது. அது தானாவே அமையும். இந்தப்படத்திற்கு அப்படி எல்லாம் அமைந்தது.

ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பாலாஜி சக்திவேல் சார் நடிக்க முதலில் மறுத்தார். பின் சிறப்பாக நடித்துக்கொடுத்தார். நரேன் ஒரு ஸ்ட்ராங்கான ரோல் செய்துள்ளார். கஷ்டங்களில் இருந்து மீண்டு வரக்கூடிய ஒரு கேரக்டர் மஞ்சுவாரியருக்கு. படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும்..

தனுஷ் எந்த கேரக்டரில் நடித்தாலும் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்காக அதிக மெனக்கெடலை எடுத்துக்கொண்டார். தேரிக்காடு சூட்டிங் ஸ்பாட்டில் பைட் சீக்வென்ஸுக்காக ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை அசால்டாக செய்தார்..!”

தயாரிப்பாளர் தாணு பேசியதிலிருந்து,

“தனுஷ் சொன்னதும் இந்தப்படத்தை உடனே துவங்கினேன். வியக்கத் தகுந்த இயக்குநர் வெற்றிமாறன். ஒருநாள் வெற்றிமாறன் போன் பண்ணி “தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார்…” என்று சொல்வார். மறுநாள் தனுஷ் போன்பண்ணி, ” சார் வெற்றிமாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது..!” என்பார் . ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் என்ன வேண்டும்..!”

Asuran Audio Launch

Asuran Audio Launch