July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என்னை பெண்டெடுத்தவர்கள் இவர்கள்தான் – சித்தார்த்
October 5, 2019

என்னை பெண்டெடுத்தவர்கள் இவர்கள்தான் – சித்தார்த்

By 0 679 Views

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வழங்க சித்தார்த் நடிக்கும் படம் ‘அருவம்’. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல்  ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ள படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி சித்தார்த் சொன்னது…

“ரவி சார் போன் செய்து கமர்ஷியல் படம் இருக்கு கேட்கீறீங்களா  என்றார். நான் எப்போதும் ரொம்பவும் தேர்ந்தெடுத்து தான் படம் செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் நான் எந்தப்படத்தையும் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தான் செய்கிறேன்.

இப்படத்தில் நம் உணவில் கலப்படம் பரவுவதை சொல்லும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதை இருந்தது. எனது கேரக்டர் சமூகத்தின் மீது கோபம் உள்ள கேரக்டர் எனக்கு உண்மையில் பொருந்தி போகக்கூடியது. அதற்காகத்தான் இந்தப்படம் செய்தேன்.

சில்வாவையும், ஏகாம்பரத்தையும் பல காலமாக தெரியும். தம்பி, தம்பி என என்னை பெண்டெடுத்துவிட்டார்கள். படத்தின் விஷுவலுக்காகத்தான் இத்தனை உழைப்பும். காத்ரீனுக்கு இந்தப்படத்தில் மிகவும் கனமான கேரக்டர். எப்போதும் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கு பாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி இருந்தால் படம் நன்றாக இருக்கும் இந்தப்படத்தில் அது சரியாக அமைந்துள்ளது.

சதீஷை காமெடியனாகத்தான் எல்லோரும் நினைக்கிறோம் ஆனால் அவருக்குள் ஒரு அற்புதமான குணச்சித்திர நடிகர் உள்ளார். அதை இந்தப்படத்தில் பார்க்கலாம் . நிறைய உழைத்திருக்கிறோம். எல்லோருக்கும் பிடிக்கும்படி படம் இருக்கும்..!