September 15, 2025
  • September 15, 2025
Breaking News
July 5, 2020

கொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை

By 0 625 Views

லாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல  கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை.

அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை வாங்கி ஓட்டிவருகிறார்.

செய்யும் தொழிலில் எதுவும் குறைவில்லை. என்றாலும் தெரிந்த தொழிலை விட்டு இன்னொரு தொழிலுக்குப் போவது கடினமான துதான்.

இருந்தாலும் வாழ்த்த வேண்டும். வெல்டன் மஞ்சு..!