June 17, 2025
  • June 17, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இசை பயணத்தை தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்
June 29, 2019

இசை பயணத்தை தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

By 0 731 Views

இசைப்புயலின் இசை வாரியான ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான ‘சகோ’வை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு அமீனின் தந்தை இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர்.

இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன்.

இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

இப்பாடலைப் பற்றி அமீன் கூறும்பொழுது,”நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. மக்கள் என் பாடலைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன். ஓர் அன்பான வரவேற்பைப் பெறுவேன் என்று நம்புகிறேன்.”

இப்பாடலைப் பற்றி இசை மேதை ஏ.ஆர் ரஹ்மான் கூறும்போது,” ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு இசை தயாரிப்பாளராகவும்,நூற்றுக்கணக்கான பாடகர்கள் எனது பாடல்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களின் பங்களிப்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வாழ்வை இசை வழியே மேம்பட செய்திருக்கின்றன. ஏ ஆர் அமீனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களின் உள்ளத்திலும் ஒரு தனி இடத்தை பிடிக்கும் என நம்புகிறேன்.”

அமீனின் இந்த முதல் பாடல் நிச்சயம் அவருக்கு சிறந்த பாடகர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். மேலும் இனிவரும் அவரின் படைப்புகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பினை உண்டாக்கும்.

தனித்தன்மை வாய்ந்த இந்தப்பாடல் 7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 வின் (7UP Madras Gig Season 2) கடைசிப் பாடலாக வெளியாகியுள்ளது.

7UP மேட்ராஸ் கிக் சீசன் 2 சோனி மியூசிக்கால் உருவாக்கப்பட்ட ஒரு இசை தொடராகும்.