March 24, 2025
  • March 24, 2025
Breaking News
December 17, 2018

அடுத்த சர்ச்சைக்கு அமலா பால் தயார்

By 0 1013 Views

படத்தை ஓட்டவும், படத்தில் வாய்ப்பு பெறவும் இப்போது எல்லோருக்கும் ஒரு பரபரப்பு தேவைப்படுகிறது. அதற்கு சோஷியல் மீடியாக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

இதைப் புரிந்து கொண்ட அமலாபால் அவ்வப்போது ‘நான் இருக்கிறேன்’ என்று அட்டென்டன்ஸ் போட்டுக்கொள்ள அவ்வப்போது ஒவ்வொரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

Amala dhum - Copy

Amala dhum – Copy

அப்படித்தான் சும்மா இருந்த சுசி கணேசனை உசுப்பிவிட்டு ‘மி டூ’வில் பரபரப்பு ஏற்படுத்தினார். அடுத்து ‘ஆடை’ அபடத்தில் அரைகுறை ஆடை அணிந்து பிரச்சினைக்குள்ளானார். பின்னர் சமீபத்தில் லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு கையில் பீர் பாட்டிலுடன் ஒரு போஸ் கொடுத்து வெறும் வாய்ப்பு அவல் போட்டார்.

இப்போது, தானே பொருக்க ‘தம்’ அடிக்கும் ஒரு படத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். “நடிகர்களே அதுவும் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் சர்ச்சைக்கு ஆளாகியிருக்க, ஒரு நடிகை பெர்சனல் ஸ்டில்லாக இப்படி பொது வெளியில் வெ:ளியிடலாமா..?” என்று பொங்கி வருகிறார்கள் சமூக வலைவாசிகள்.

ஆக, அமலாபால் திட்டம் வெற்றி. ஆனால், இதெல்லாம் பட வாய்ப்பு பெற்றுத் தருமா மிஸ்.பால்..?