அஜித் நடித்து வரும் வலிமை படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி விட்ட நிலையில் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வலிமை அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அந்தப் பாடலை எதிர்பார்த்து அதனை பரப்புரை செய்யத் தயாராக இருக்கும் நிலையில் இன்று அஜித்திடமிரந்து வந்திருக்கும் திடீர் அறிவிப்பு அவர்களை பதற வைத்து இருக்கிறது.
அந்த அறிவிப்பில் அஜீத் தன்னை இனிமேல் யாரும் தல என்றோ, பட்டப் பெயர்களை வைத்தோ அழைக்கக்கூடாது எனவும் அஜித் அல்லது அஜித் குமார் அல்லது ஏ கே என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்று மாலை 7 மணிக்கு டிரெண்டிங்கில் ‘ தல ‘ என்று தெறிக்கவிட இருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஊடகத் துறையினருக்குமான வேண்டுகோளாகவே அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆனாலும் ட்விட்டரில் தல என்ற ஹேஷ் டேகே ட்ரெண்டிங் ஆகி வருகிறது… அஜித் அறிக்கை கீழே…