July 2, 2025
  • July 2, 2025
Breaking News
February 13, 2020

காவல்துறை செயலியை பிரபலப்படுத்த அஜித் விஜய் படங்கள்

By 0 1292 Views

தமிழ்நாடு போலீஸ் ‘காவலன்’ ஆப் – எனப்படும் செயலியை பெண்களுக்காக அறிமுகம் செய்தார்கள் அல்லவா?

ஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை காப்பாற்றுவார்கள்.

இந்த செயலி தற்போது பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

kavalan app Police

kavalan app Police

இந்நிலையில் இந்த செயலி குறித்து பெண்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியாக காவல்துறையினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தேனி மாவட்ட காவல்துறையினர் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் ஒரு காட்சியை மையப்படுத்தி இந்த காவலன் செயலி குறித்த விளம்பரத்தை சமூகவலைதளத்தில் செய்திருந்தார்கள். இந்த விளம்பரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து தேனியை அடுத்து தற்போது குமரி மாவட்ட காவல்துறையினர் தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் இருந்து ஒரு காட்சியை எடுத்து அந்த காட்சியின் வசனத்தை ‘காவலன்’ செயலிக்கு ஏற்றவாறு மாற்றி விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த இரண்டு விளம்பரங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மற்ற  மாவட்ட காவல்துறையினர்களும் சூர்யா, தனுஷ், சிம்பு படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து விளம்பரம் செய்ய திட்டம் இருக்கிறதாம்.

இது நல்ல யோசனைதான்..!