January 25, 2026
  • January 25, 2026
Breaking News
December 31, 2019

தல அஜித்தை மிரட்ட தயாராகும் இயக்குநர்

By 0 1015 Views

‘தல’ ரசிகர்களுக்கு இனி வலிமை படம் பற்றிய அப்டேட்டுகளைப் பெறுவதுதான் தலையாய வேலையே.

இந்நிலையில் தல அஜித் அடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ காம்போவான போனி கபூரின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவரது 60-வது படமான ‘வலிமை’ பற்றிதான் இனி அவர்களின் அடுத்த நகர்வு இருக்கப் போகிறது.

அதன்படி நவம்பரில் இருந்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து புது வருடத்தின் ஜனவரியில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

படத்தில் அஜித் உடன் நடிக்கும் நடிக, நடிகைகள் பற்றிய தகவலும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சில உறுதியாகாத நடிக, நடிகையரின் பட்டியலும் வெளியில் உலவி வருகிறது.

அதன்படி படத்தின் நாயகியாக யாமினி கௌதம் பேசப்படுகிறார். அதேபோல் ‘வலிமை’ வில்லனாக சமீபத்தில் வெளியான வி1 படத்தின் இயக்குநர் பாவெல் நவகீதன் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘மெட்ராஸ்’, ‘வட சென்னை’, ‘குற்றமே தண்டனை’ படங்களில் நடித்திருக்கும் பாவெல் நவகீதன் அஜித் படத்தைப் பொறுத்தவரை நல்ல தேர்வுதான். ஆனால், அவரைத் தாண்டியும் இன்னும் சில வில்லன்கள் படத்தில் இருப்பார்கள்.

இருந்தாலும் அஜித்தை மிரட்ட வாய்ப்பு கிடைப்பதென்றால் சும்மாவா..?