May 3, 2025
  • May 3, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை
September 21, 2020

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை

By 0 741 Views

அங்காடித்தெரு படத்தில் அறிமுகமான நடிகை சிந்துவை ஞாபகம் இருக்கிறதா? அதற்குப் பிறகும் பல படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வந்தார்.

படப்பிடிப்பு இல்லாத நிலையிலும் அவர் யூடியூப் சேனலில் மிகவும் பிரபலமாக இருந்தார். அடிக்கடி கோபாவேசமாக தன் கருத்துக்களை யூடியூபில் வெளிப்படுத்தி கவனத்தை கவர்ந்து வந்தார்.

கொரானா காலகட்டத்தில் கூட வெளியில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்த அவருக்கு திடீரென்று புற்றுநோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதற்கான அறுவை சிகிச்சை செய்து முடித்தது மட்டுமல்லாமல் அதற்கு பிறகான கீமோதெரபி உள்ளிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு மிகப் பெரிய அளவில் பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு சில நடிகர்கள் ஓரளவுக்கு உதவி இருப்பதாகவும் இருந்தாலும் அது போதவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருடன் அங்காடித்தெரு படத்தில் அறிமுகமான பிளாக் பாண்டி இந்த விஷயம் கேள்விப்பட்டு சிந்துவைத் சந்தித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதுடன் உதவியும்  கோரி வருகிறார்.

அதில் பேசியிருக்கும் சிந்துவும் தனது பரிதவிப்பு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறார் அவருக்கு உதவலாம் அவர் உருக்கமாகப் பேசி இருக்கும் வீடியோ கீழே…