November 12, 2025
  • November 12, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகை சஞ்சிதா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா – வீடியோ ஆதாரம்
December 7, 2020

நடிகை சஞ்சிதா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா – வீடியோ ஆதாரம்

By 0 623 Views

திருவண்ணாமலையில் மலை மீது பக்தர்கள் ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறியதுடன் மகா தீபத்துக்கு நெய்யும் ஊற்றினார்.

சஞ்சிதா மகாதீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்ட போது, மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்கின்றனர்.

மலை ஏறி வரும் பக்தர்களை தடுப்பதற்கு வனத்துறையினர் முக்கிய பாதைகளில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தடையை மீறி மலை ஏறி செல்லும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த வழிகாட்டி (கைடு) மூலமாக தான் அவர் மலைக்கு சென்று இருப்பார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தவறுகளைத் தடுக்க முடியும்.