September 1, 2025
  • September 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழில் முதல் படம் வெளியாகும் நிலையில் கதாநாயகி தற்கொலை
May 14, 2022

தமிழில் முதல் படம் வெளியாகும் நிலையில் கதாநாயகி தற்கொலை

By 0 1144 Views

தமிழில் “லாக் டவுன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சஹானா, நேற்று முன்தினம் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டார்

கடந்த வியாழன் அன்று தன்னுடைய 22வது வயது பூர்த்தியானதை ஒட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சஹானா அன்று இரவே கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்ட சஹானா அவரது கணவரால் கொடுமைப் படுத்தப் பட்டார் என்று பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவரான சஜத் விசாரணைக்கு உள்ளாக்க பட்டிருக்கிறார்

ஜாலி பாஸ்டியன் என்ற சண்டைப் பயிற்சியாளர் தமிழில இயக்கிய ‘லாக் டவுன்’ படம், ரிலீசுக்கு தயாராக உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நடிகை சஹானா, மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்துள்ளார்.

22 வயதில் பிறந்தநாள் அன்று மரணத்தை தழுவிய சஹானா வுக்கு மலையாள பட உலகம் அஞ்சலி செலுத்துகிறது.