September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனா வேலையின்மையால் பழம் விற்கும் இந்தி நடிகர்
May 22, 2020

கொரோனா வேலையின்மையால் பழம் விற்கும் இந்தி நடிகர்

By 0 583 Views

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பிவிடவில்லை. ஊரடங்கால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முடங்கியிருந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் சினிமாவில் பணியாற்றும் தினசரி கூலி தொழிலாளர்களும், நடிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னணி நடிகர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் சங்கங்களும் உதவிக்கரம் நீட்டின.

இந்நிலையில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று வாழ்வை நகர்த்தி வருகிறார்.

மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.