குஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது 77 வது வயதில் கனோடியா உயிரிழந்தார்.
குஜராத் திரையுலகில் டப்பிங் படங்களுக்கு பெயர்போன நரேஷ் கனோடியா, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கர்ஜன் சட்டமன்ற தொகுதியில் போட்ஜ்டியிட்ட அவர் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த 25 ஆம் தேதி நரேஷ் கனோடியாவின் சகோதரர் மகேஷ் கனோடியா கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தற்போது நரேஷ் கனோடியாவும் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவைத் தொடர்ந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடந்த இரண்டு நாட்களில் நாங்கள் மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியா இருவரையும் இழந்துள்ளோம் கலாச்சார உலகில் அவர்கள் அளித்த பங்களிப்பு குஜராத் பாடல்கள், இசை நாடகங்கள் என அனைத்திலும் பிரதிபலித்தது என தெரிவித்துள்ளார்.