November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என்னுடைய வாழ்வில் முக்கியமான படம் கமலி – கயல் ஆனந்தி
February 9, 2021

என்னுடைய வாழ்வில் முக்கியமான படம் கமலி – கயல் ஆனந்தி

By 0 928 Views

‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதில் இருந்து…

தயாரிப்பாளர் துரைசாமி –

“ஒரு படம் தயாரித்தால் அது நல்ல திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார்..!”

நடிகை ஸ்ரீஜா –

“தேனியில் பிறந்து வளர்ந்ததால் இப்படத்தில் என்னை சுலபமாக இணைத்துக் கொள்ள முடிந்தது. இந்த தருணத்தில் ‘நக்கலைட்ஸ்’ யு-டியூப்- க்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வள்ளி. அந்த பாத்திரத்தை என்னுடைய தோழியை உதாரணமாக எடுத்துக் கொண்டேன்..!”

ரேகா சுரேஷ் –

“என்னுடைய சொந்த ஊரே சென்னை. தாத்தா பாட்டி ஊர் கிருஷ்ணகிரி. இப்படத்தை இயக்குநர் ரசித்து செதுக்கியிருக்கிறார். பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்படத்தில் அம்மா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது வரும் வரை விடவில்லை..!”

நடிகை அபிதா –

“இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நேத்ரா. நேர்மறை மற்றும் எதிர்மறை கலந்த கலவையாக இருக்கும் என்னுடைய கதாபாத்திரம்..!”

இமான் அண்ணாச்சி –

“தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். இப்படத்தின் மூலம் அருமையான கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்து கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். ‘கயல்’ ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.

உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் நடிப்பு வரும்வரை விடாமல் வேலை வாங்கியிருக்கிறார்கள்..!”

நடிகர் பிரதாப் போத்தன் –

“இப்படத்திற்காக இயக்குநர் ராஜசேகர் அழைக்கும்போது வலிமையுள்ள காதல் கதையாக தோன்றியது. இக்கதையை மிகவும் பிடித்துதான் நடிக்க வந்தேன்..!”

இயக்குநர் ராஜசேகர் துரைசாமி –

“நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தைச் சேர்ந்தவன்.
என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் தூணாக இருந்தவர்கள் என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணிதான்.

நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் பாத்திரம்தான் கமலி. அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அதுதான் இப்படத்தின் கருவாக தோன்றியது.

நாயகி படமாக எடுத்தால் தான் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாகும்.

கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்? மகளாக எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு கட்சியை நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே நடித்துக் கொடுத்தார் ஆனந்தி.

அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள்.

இந்த கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள் பிடித்தால் பணியாற்றுங்கள் என்று கூறினோம்.

உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம். கதை கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முறையிலேயே நடித்துக் கொடுத்தார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார். அவருக்கு மிக்க நன்றி.

பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன்.

இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்.

‘கயல்’ ஆனந்தி –

என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும்.

பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது.

ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்..!”