November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • 65 படத்தின் திரை விமர்சனம்
March 15, 2023

65 படத்தின் திரை விமர்சனம்

By 0 479 Views

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களை மறு உருவாக்கம் செய்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தினார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். 

மீண்டும் அதுபோன்ற டைனோசர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்றால் அதில் புதுமையாக என்ன இருக்க முடியும்..? வேறென்ன… கதைதான்..!

டைனோசர்கள் உலா வர வேண்டும். அதில் மனிதர்களும் இருக்க வேண்டும் என்றால் ஸ்பீல்பெர்க் செய்ததைப் போல் இப்போதைய காலகட்டத்தில் டைனோசர்களை மறு உருவாக்கம் செய்தாக வேண்டும் – அதனால் இந்தப் படத்தில் புதுமையாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால் அப்போது அங்கே மனிதர்கள் எப்படி வர முடியும்? அதற்காக கற்பனை செய்து வேறு கிரகத்தில் மனிதர்கள் இருக்க அங்கிருந்து ஓட்டிவரப்பட்ட ஒரு விமானம் தவறுதலாக இன்னொரு கிரகத்தில் இறங்குகிறது. அதுதான் பூமி என்று ஒரு கதை சொல்லி இருக்கிறார்கள்.

65 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான இந்த நிகழ்வு ஒரு எரிகல் பூமியை தாக்குவதுடன் முடிவடைகிறது. ஒரு பெரிய எரிகல் தாக்கித்தான் பூமியில் உள்ள டைனோசர்கள் அழிந்தன என்று ஒரு ஆய்வு உண்டு.

அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்து முடிகிறது படம்.

சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தின் திரைக்கதை, தயாரிப்பு மற்றும் இயக்கம் Scott Beck மற்றும் Bryan Woods.

இந்த இரட்டை இயக்குனர்கள், 2018 இல் A Quiet Place என்கிற ஒரு திகில் படத்தின் கதாசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது !

Sam Raimi, Scott Beck, Bryan Woods and Deborah Liebling -ஆகியோர் இப்படத்தினை கூட்டாக தயாரித்துள்ளனர்.

கதை இதுதான்…

மகளின் மருத்துவ செலவுக்காக வேறு கிரகத்துக்கு விமானத்தை ஓட்ட ஒத்துக் கொள்ளும் Mills (Adam Driver ) சற்றும் எதிர்பாரா வண்ணம் , தான் ஓட்டி வந்த விமானம் அபாயத்தையும் ஆபத்தையும் அதிக அளவில் அள்ளி வழங்கவல்ல 65 ஆண்டுகள் பழமையான பூமி என்ற கிரகத்தில் வந்திறங்குகிறது!

அந்த விமானத்தில் Miils ஐ தவிர மிஞ்சியிருந்த ஓருயிர் Koa (Ariana Greenblatt). வழக்கமாக ஓர் ஆணும் பெண்ணும் தனிமைப்பட்டால் காதல் வயப்படுவார்கள். ஆனால் இதில் மகளின் வயதை ஒத்த கோவாவுடன் மில்ஸ் தந்தைப் பாசம் காட்டி அவரை அழைத்து வருவது நெகிழ வைக்கிறது.

எதிர்கொள்ள உள்ள அபாயத்தின் ஆழத்தை உணராத இவ்விருவரும் எதிர் நிற்கும் ஆபத்துகளைக் கடந்து உயிர் தப்ப வேண்டும்!

டைனோசர் மற்றும் இதர கொடிய விலங்கினங்களும் உலா வரும் அப்பகுதியில், தங்களை காத்துக்கொள்ள அவர்கள் இருவரும் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் பின்பாதி.

Chloe Coleman (as Nevine) and Nika King (as Alya) ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

Salvatore Totino படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.

Danny Elfman/Chris Bacon ஆகிய இருவரும் இசை அமைத்துள்ளனர்.

Josh Schaeffer/Jane Tones இரட்டையர்கள் படத்தொகுப்பை கவனித்துள்ளனர் .

ஆங்கிலம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.