July 25, 2026
  • July 25, 2026
Breaking News
July 26, 2026

ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியைத் தவிர கமல் சார் கூட நடித்திருக்க முடியாது..! – மிஷ்கின்

By 0 7 Views

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா..!

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் மடோன் அஷ்வின், பி.எஸ்.வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பேசும்பொழுது…

“இன்ப நாள் இது… இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் கால தாமதம் ஆனதற்கு நான் காரணம் இல்லை. இந்தப் படத்திற்கு தான் முதல் முறையாக பெரிய 8 கம்பார்ட்மென்டும் அமைத்திருக்கிறோம்.

விஜய் சேதுபதி அயராது உழைத்தார். மனிதநேயத்தின் மறுபக்கம் உள்ளவர்.அதிகமான அறிவு கொண்டவர். நாசர் மிக அருமையாக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும். 63 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

மிஷ்கின்…

“நந்தலாலா கதை சொல்லும் போது தாணு சார் மீட் பண்ணினேன். ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல. ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது. பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல. அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அதற்கு பிறகு தான் தாணு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவர் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார்.

விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு, ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி… நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு. என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். விஜய் சேதுபதி அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன். இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன்.

இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது. கமல் சார் கூட பண்ணியிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல. படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க. விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது. எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு. ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவார். நான் நாசர், நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன்.

ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம். நான் பெருமைப்படுகிறேன். தானு சார்க்கும் ரொம்ப நன்றி. உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு. பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி. அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன். சினிமா அப்படித்தான் இருக்கும். தாணு சாருக்கு ரொம்ப நன்றி. உங்க காலத் தொட்டு வணங்குகிறேன். இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன். ரொம்ப நன்றி..!

விஜய் சேதுபதி…

“இன்னைக்கு எங்களை வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி. எனக்கு பேசறதுக்கு நிறைய வார்த்தை இல்ல. நான் ரொம்ப கவனிச்சுட்டு இருந்தேன். இது எல்லாமே எனக்கு கிடைத்த பெருமை இல்லை. மிஷ்கின் சாருக்காக தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம்.

தாணு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கேன். நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு. கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார். நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன். சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுச்சு. சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன். எனக்கு ஒரு வாட்ச் கொடுத்தார். பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன். அதுக்கு அப்புறம்தான் ட்ரெயின் மூவி நடிச்சேன்.

செட் கலகலனு இருக்கும். மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தார். அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க. இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சுபப்பாரு. அறிவு, அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார். இந்தப் படம் உங்களுக்கு திர்லரா இருக்கும். ஆனா எனக்கும் மிஷ்கின் சார்க்கும் ரொம்ப ரொமான்டிக் படம். ஐ லவ் யூ மிஷ்கின் சார். என் கூட நடிச்ச எல்லாருக்கும் ரொம்ப நன்றி. எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க.

படத்தில் நடித்த *நடிகை ப்ரீதி கரன்* அவர்கள் பேசும் பொழுது…

“எல்லாருக்கும் வணக்கம். ட்ரெயின் படம் வெளியாக போகிறது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆடியன்ஸ் எல்லாம் விரைவில் திரையரங்கில் பார்ப்பீர்கள். என்ன தேர்ந்தெடுத்ததற்கு மிஷ்கின் சார்க்கு நன்றி. எந்த இடையூறும் இல்லாமல் படத்தில் நடித்திருக்கிறேன்.  நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர். யுகி சார் நடிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு தானு சாருக்கு நன்றி. 

படத்தில் நடித்த *நடிகை ஐரா தயானந்த்*…

“எல்லோருக்கும் நன்றி. ட்ரெயின் என்னுடைய முதல் படம். நான் இங்கே மிகவும் பயத்திலிருந்து இருந்தேன். ஆனா மிஷ்கின் சாரும் அவர்களின் டீமும் எல்லா சௌகரியமும் செய்தார்கள். என்னுடைய இரண்டாவது வீடு மாதிரி இருந்தது. விஜய் சேதுபதி சார் கூட நடிக்கும் போது மிகவும் நடுக்கமா இருந்தது. விஜய் சேதுபதி அவர்களுடன் நடித்தது கனவு பலித்தது மாதிரி இருந்தது. எனக்கு தமிழ் தெரியாது. என்னை இந்தப் படத்தின் நடிக்க வைத்ததற்கு தாணு சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாசர் சார் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல. ஆனாலும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு எனக்கு கட்டிக்கொண்டு வந்தாரு. பவுசியா மேடம்க்கு என்னுடைய நன்றி. 

நடிகை மாளவிகா சுந்தர்…

“மிஷ்கின் சார் என்னை அழைத்த போது பாடல் பாடுவதற்கு என்று நினைத்தேன். இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது நடிப்பதற்காக என்று. மிஷ்கின் சாருக்கு ரொம்ப நன்றி. இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்…

“மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. பல பரிணாமங்கள் பார்த்தேன். நான் நிறைய நல்ல வார்த்தைகள் பேசுவேன் என்று கூறுவார்கள். என்னை விட சுத்தமான வார்த்தைகள் பேசுபவரிடம் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய கற்றுக் கொடுத்தார். எவ்வளவு கோபம் இருந்தாலும் அடுத்த நிமிடம் மறந்து விடுவார். சூட்டிங் முடிந்ததும் 2000 ரூபாய் கொடுப்பார். உள்ளத்தில் ஒரு குழந்தை மிஷ்கின். ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய கடவுளை வேண்டி வாழ்த்துக்கள் சொல்கிறேன். 

நடிகர் அஜய் ரத்னம்…

“இந்தப் படத்தினுடைய தாய் தாணு. பெரிய தயாரிப்பார் என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. மிஷ்கின் ஒரு மாஸ்டர் கடினமான மனிதர். அதிக புத்தகங்கள் படிப்பார். ஆஃபீசில் நிறைய புத்தகங்கள்தான் இருக்கும். இப்பொழுது அவர் இசை அமைப்பாளர் இந்தப் படத்தில். விஜய் என்றால் வெற்றிதான். விஜய் சேதுபதி ரொம்ப வித்தியாசமாக நடித்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி.

நடிகர் சுரேஷ் மேனன்…

“இயக்குனர் தயாரிப்பாளர், நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!

நடிகர் ஷாஜி…

“இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய கதாநாயகர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். உயிரை கொடுத்து படம் எடுத்து இருக்கிறார் மிஷ்கின். என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.

நடிகர் நாசர்.. 

“உண்மையாகவே ஒரு தந்தை மகனை பார்த்து சந்தோஷப்படுவது போல் எனக்கு இருக்கிறது. சில சமயம் இப்படி ஒரு மகன் பிறந்ததற்காக கோபமும் வருகிறது. இந்தப் படம் உருவாக உதவியாக இருந்த தாணு அண்ணன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். ஏனென்றால் இந்த படம் வழக்கமான படங்கள் போன்று இல்லை. இந்தப் படத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பதற்கு எங்கள் படக்குழுவின் சார்பாக நன்றி. மிஷ்கின் பற்றி பேசினால் பல மணி நேரம் பேசலாம். மேடை நாகரிகம் கருதி இப்பொழுது கூறுகிறேன். ஐ லவ் யூ மிஷ்கின். எனக்கு மிஷ்கினிடம் மிகவும் பிடித்தது அவருடைய ப்ரொபஷனலிசம். கதை எழுதி முடித்ததும் நான்கு பேரிடம் கொடுத்து படிக்க சொல்வார். அதில் நானும் ஒருவன். இவரிடம் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளது. ஒன்று நடிகர்களுக்கான அழகான பாதை போட்டு வைத்திருப்பார் மற்றொன்று நம் விருப்பம் போல் நடிக்க வைப்பார். 

படத்தின் ஒளிப்பதிவாளர் ஃபௌசியா…

“மிஷ்கின் சார்க்கு என்னுடைய முதல் நன்றி. முதலில் எனக்கு பயமாக இருந்தது. பிறகு அதை மிஷ்கின் சரி செய்தார். இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு ஒளிப்பதிவாளரின் பெயரை பதிவு செய்த முதல் படம் இது. 

இயக்குனர் அருண் மாதேஸ்வரன்…

“எல்லாருக்கும் வணக்கம் மிஷ்கின் சார் உங்களுடைய படம் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது. விஜய் சேதுபதி சார் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நீங்கள் நடிக்கும் படம் அனைத்தும் எனக்கு பிடிக்கும்..!”

நடிகை மற்றும் பாடகி ஷ்ருதி ஹாசன்…

“மிஷ்கின் கிரியேட்டிவ் மைண்ட் உள்ள ஒருத்தர். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்புக்கு நன்றி சார்..!”

இயக்குனர் அமீர்…

“அனைவருக்கும் இறைவன் இடத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட ஒருத்தர். எந்த விமர்சனத்தையும் கடந்து வருவார். எது செய்தாலும் அது என்னுடைய ஸ்டைல் என்று சொல்லுவார். நம்ம எல்லாரும் பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் படங்கள் எல்லாத்தையும் பார்த்து வளர்ந்திருக்கிறோம்.

இவர் படம் ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணும். அப்படி தனக்கான ஒரு ஸ்டைல் கிரியேட் பண்ணிக்குவார். என்னை கூப்பிட்டு போய் டான்ஸ் ஆட விட்டுட்டார். விஜய் சார விட்டுட்டு விஜய் சேதுபதி ரசிக்க வைத்தார். TR சார்க்கு பிறகு மிஷ்கின் தான். மிஷ்கின் ஒரு செல்ல கிறுக்கன் அவருக்கு எந்த விமர்சனம் பற்றியும் கவலை இல்லை போலி இல்லை. மிஷ்கினை நான் ரசித்துக்கொண்டே இருந்தேன். வாழ்த்துக்கள் மிஷ்கின். விஜய் சேதுபதி மாதிரி மரியாதையா பேசுவதற்கு இனை யாருமே இல்லை. விஜய் சேதுபதி படம் என்றாலே நம்பிக்கை. தாணு மிகை படுத்தி சொல்ல மாட்டாரு. இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். என்ன வேணும்

இயக்குனர் சசி…

“இந்த படத்தை நான் பார்க்க மிக முக்கியமான காரணம். மிஸ்கின் உடைய இசை. மிஷ்கின் நடிகர்கள் கிட்ட நடிப்பை வாங்குவது வித்தியாசமா இருக்கும். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது. தாணு சார் இந்த படம் நீங்கள் நினைப்பது போல் வெற்றி படமாக அமையும். 

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன்… 

“தமிழகத்தை ஆண்டு கொண்டு இருப்பது விசில் சத்தம் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமா நடக்கறதுக்கு காரணம் ரசிகர்கள் உங்களுடைய விசில் சத்தம். ரயிலர் பார்க்கும் பொழுது ஆங்கிலம் படம் பார்ப்பது போல் இருந்தது. ஒவ்வொரு மனிதனும் உள்ளே ஒரு மாதிரி வெளியே ஒரு மாதிரி இருப்பார்கள் ஆனால் மிஷ்கின் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பார். என்ன நினைக்கிறாரோ அதை தான் பேசுவார். கொஞ்சம் கூட தயக்கம் இருக்காது. நிஜமான மனிதனா நான் அவரை ரசிக்கிறேன். எம் ஆர் ராதாவும் மிஷ்கினும் ஒரே மாதிரியானவர்கள். விஜய் சேதுபதி பிலாசபி ஜிலேபி மாதிரி பேசுறீங்க. தோல்வி உங்களுக்கு சந்தோசமா இருக்கும் வெற்றி பயமா இருக்குனு சொன்னீங்க, இந்த படம் உங்களுக்கு மாபெரும் பயம் கொடுக்க போகுது அவ்வளவு பெரிய வெற்றி அடையப்போகுது இந்த படம். மிஷ்கின்க்கு நன்றி சொல்லணும் பவுசியா ஒளிப்பதிவாளரா தேர்ந்தெடுத்ததற்கு. தானுக்கு எனக்கும் நிறைய இருக்கு என்னுடைய முதல் கதை இவருக்கு தான் சொன்னேன். எல்லார்கிட்டயும் என்ன பத்தி இவர் டைரக்டரா வரப்போறாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பார், அந்த நன்றி கடனுக்காக தான் நான் வந்திருக்கிறேன். அந்த அளவு அன்பு உங்க மேல வச்சிருக்கேன். மிஷ்கின் பயணம் மிக நீண்டது அந்த பயணம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

இயக்குனர் விக்னேஷ் சிவன்

“எல்லாருக்கும் வணக்கம் வாழ்த்துகள் மிஷ்கின் சார் இந்த படத்தில் நடிக்க அழைத்தேன் அவர் மறுத்துவிட்டார். சார் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சார். நானும் ரவுடிதான் படம் இல்லன்னா நான் யாருன்னு யாருக்குமே தெரியாது. அந்த படத்திற்கு ஒரே காரணம் விஜய் சேதுபதி சார் மட்டும்தான். நான் போடா போடி படம் இயக்கிய போது எனக்கு கால் பண்ணி வாழ்த்துக்கள் கூறினார். இன்னைக்கு இயக்குனராக இருக்கிற பல பேர் விஜய் சேதுபதி னால தான் இயக்குனர் ஆகியிருக்காங்க அதுக்கு மிகப்பெரிய நன்றி சார்.

இயக்குனர் ராம்…

“ஒரு ஆறு வருடம் கழித்து மிஷ்கின் காக நடக்கிற ஒரு இசை வெளியீட்டு விழா. இந்த ஆறு வருஷத்துல இரண்டு படம் எடுத்து முடிச்சிட்டான். ஒரு இயக்குனர் எவ்ளோ கஷ்டப்படணுமோ அதை எல்லாமே அவர் பட்டு இருக்கிறார். இந்த ஆறு வருஷத்தில் அவருடைய அவமானங்கள் அவதூறுகள் எல்லாத்தையும் நான் நேர்ல பார்த்திருக்கேன். எல்லாத்தையும் தாங்கிக் கொண்ட ஒரு மனிதர். ஏமாற்றங்கள் நம்பிக்கை துரோகங்கள் அத்தனையும் ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்துல தாக்கினால் காணாமல் போயிடுவார். மிஷ்கின் இடது கையில் தள்ளிவிட்டு நிற்கிறார். அது அவர் மனிதர்கள் மேலே வைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கை. மிஷ்கின் படம் குற்றம் நம்பிக்கை இரண்டும் இருக்கும். தமிழ் சினிமாவின் திரில்லர் படத்தினுடைய தந்தை இவர்தான் நீங்க எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த உலகத்தில் நடக்கிற தீமைக்கு உங்களுக்கும் பங்கு இருக்கு. மிஷ்கின் கொலையை ரசித்து ரசித்து எடுப்பார் அவர் படத்தில் அவர்களுடைய நியாயம் புரிய வைக்கும். செத்துப் போவதற்கு காரணம் அவர்களாகவே இருப்பா இறுதியில் அவர்கள் மீது கருணை வரும் அதுதான் மிஸ்கின் உடைய மொத்த உலகம். விஜய் சேதுபதி நகைச்சுவை கதாபாத்திரங்களை மிக சிறப்பாக கையாளுகிறார், கமல் சாருக்கு பிறகு நல்ல கையாண்டு இருக்கிறார். அவருடைய படம் பார்க்கவும் ஆர்வமா இருக்கேன். தானு எல்லாத்துக்குமே ரெடியா இருக்கக் கூடிய புலி தான் ட்ரெயின் படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். 

இயக்குனர் வெற்றிமாறன்…

“மிஷ்கின் இசையமைப்பாளர் அதைப்பற்றி தான் பேசணும். அவர் எப்பொழுதும் புதிதாக கற்றுக்கொண்டே இருப்பார். மிஷ்கின்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிஷ்கின் உடைய ஸ்பெஷல் உங்களுக்குள்ளையும் ஒரு கிரேட் இருக்கும் அதை எதிர்பார்க்காத இடங்களில் காட்டுவார். எல்லா படங்களிலும் தொடர்ந்து அது இருக்கும். நாம் அவர் படங்களை பார்க்கும் போது அதை எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம். பெரிய திரைக்கதை எழுத்தாளர் அவருடைய படங்களுக்கு 100% உழைப்பை கொடுப்பார். தாணு சார் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சேது என்னுடைய பயணங்களில் ஒரு அங்கமாக இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்ல ஒரு நல்ல மனிதர். மிஷ்கின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய ஒருவர்,சேதுவும் அப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ற செட்டு எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. எல்லாரும் என்ஜாய் பண்ணி இருப்பார்கள். இந்த படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்..!