ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி கொண்டாட சில உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு அபாயகரமான தொழிலாக இருக்கிறது பட்டாசு தயாரிக்கும் தொழில்.
அப்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க, உள்ளே இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். புகை மூட்டத்தில் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்கப் போராடினர். அவர்களின் தகவலின்படி தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிகிறது.
இன்னும் முழுமையாக தீ அணைக்கப்படாததால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை. தீபாவளி நெருங்கி வருவதால் பாதுகாப்பில் இருந்த பட்டாசுகளின் சேத மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என்று தெரிகிறது.
அவற்றைவிட உயிர்களின் மதிப்பு பெரிதல்லவா..?