April 26, 2024
  • April 26, 2024
Breaking News

Monthly Archives: September 2021

மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது

by on September 18, 2021 0

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” .  இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று நேற்று படக்குழு அறிவித்தது.  பல தலைமுறகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் “பொன்னியின்செல்வன்” .  எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர்.  […]

Read More

ஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி

by on September 17, 2021 0

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,   “இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும் போதும் இங்கு வந்திருக்கிறார் .அவர் ஒரு இசையமைப்பாளராகவும்  நடிகராகவும்   இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். […]

Read More

டிக்கிலோனா திரைப்பட விமர்சனம்

by on September 16, 2021 0

முன்பெல்லாம் ஹீரோக்கள் என்றால் போலீஸ் கதையில் நடித்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. எல்லா ஹீரோக்களும் ஒரு படத்திலாவது போலீஸாக வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பு அந்த விதி ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்தாக வேண்டும் என்று மாறி எல்லோரும் கிராபிக்ஸிலாவது சிக்ஸ் பேக் வைத்தார்கள். இது டைம் டிராவல் சீசன்.    டைம் ட்ராவல் செய்ய கால யந்திரத்தில் ஏறி கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் செல்லும் டிரெண்டில் சந்தானம் இப்போது அந்த யந்திரத்தில் […]

Read More

சென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு

by on September 16, 2021 0

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழகத்தின் 14-வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்றார்.   இவர் பஞ்சாப் மாநில கவர்னராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டார்.    இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Read More

கோடியில் ஒருவன் திரைப்பட விமர்சனம்

by on September 16, 2021 0

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது முதுமொழி. அப்படி கவுன்சிலர் ஆகி அரசியல் குறுக்கீடுகளால் தன் கிராமத்துக்கு நல்லது செய்ய முடியாமல் போன தாய், தான் மகனை ஐ ஏ எஸ் ஆக்கி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கிறார். குட்டி பாய்ந்த அந்த 16 அடி என்ன என்பதுதான் கதை. எரிந்த சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர் பிழைக்கும் என்பார்கள். அந்த வகையில் கர்ப்பிணியான கவுன்சிலர் தாயை சதிகாரர்கள் உயிரோடு […]

Read More

துக்ளக் தர்பார் திரை விமர்சனம்

by on September 15, 2021 0

துக்ளக் என்ற மன்னரின் தர்பார் எப்படி குழப்பமாக இருந்ததோ அதைப்போலவே ஒரு குழப்பமான கதையைத் தயார் செய்து அதற்கு ‘துக்ளக் தர்பார்’ என்றே பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள். ரொம்ப தைரியம்தான்..! அமைதிப்படையில் இரண்டு கை போட்டு, பிறகு அதில் அந்நியனில் ஒரு கை போட்டு, அதில் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் அரைக்கை போட்டு மொத்தமாக மிக்ஸியில் அடித்தால் இந்தப்படத்தின் திரைக்கதை கிடைக்கும். ஒரே மனிதனின் சிந்தனையில் இரண்டு விதமான ஆட்கள் […]

Read More

சூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு

by on September 15, 2021 0

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் சொல்லத் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் […]

Read More

ஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்

by on September 14, 2021 0

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம், ஜி. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபதி” விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, […]

Read More

தியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்

by on September 13, 2021 0

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் ‘அருண்விஜய்யின் பார்டர்’. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான […]

Read More

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்

by on September 13, 2021 0

லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க, இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய…. நாயகன் சாந்தனு […]

Read More