June 12, 2024
  • June 12, 2024
Breaking News

Monthly Archives: February 2019

லைக்கா புரடக்‌ஷன்ஸின் அடுத்த படம் பன்னி குட்டி

by on February 28, 2019 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” . இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா, ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி […]

Read More

சீனு ராமசாமி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு

by on February 28, 2019 0

எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நீர்பறவை, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’ என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.   டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான “ரெட் ரம்” திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் […]

Read More

10 கஜா புயல் பாதிப்பு பள்ளிகளைத் தத்தெடுக்கிறோம் – ஆர்ஜே பாலாஜி

by on February 28, 2019 0

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார்.   பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர்.   அதில் அவர்கள் பேசியதிலிருந்து…   இப்படி ஒரு […]

Read More

ஒரு ஹீரோவின் நம்பமுடியாத கண்ணீர்க் கதை

by on February 27, 2019 0

மரணத்தை வென்ற ஒரு ரியல் ஹீரோவின் கதை தான் ‘கிரிஷ்ணம் ‘என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்கள் கொண்டவையாக இருக்கும். அப்படிப்பட்ட கதைையைக் கொண்ட ஒரு வாலிபன்தான் அக்ஷய் கிருஷ்ணன். இன்று ‘கிருஷ்ணம்’ படத்தின் நாயகன். பிளாஷ் பேக் போனால் திரிச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவன். அவன்படிப்பில் மட்டுமல்ல நடனம் ,நாடகம், மேடைப் பேச்சு ,விவாதம் ,விளையாட்டு என்று சகல துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தான். […]

Read More

தல க்கு போட்டியாக துப்பாக்கி ஏந்தும் நடிகை

by on February 26, 2019 0

இப்போது திரைக்கு வரும் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி… பல துறைகளில் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். இவர்களில் வடக்கே இருந்து வரும் ‘அடா ஷர்மா’ அடடே போட வைக்கும் அளவுக்கு திறமைசாலி. இவர் கயிறை வைத்து விளையாடும் ‘மல்லகம்ப்’ விளையாட்டில் சூரி (‘சூரர்’க்கு பெண்பால் ‘சூரி’தானே..?) என்பதை கடந்த முறை அவரே ட்வீட் செய்த வீடியோவில் போட்டிருந்தோம். இந்த முறையும் ஒரு வீடியோ போஸ்ட் செய்திருக்கிறார் அவர். அதில் துப்பாக்கி சுடுவதில் ‘ரிவால்வர் ரீட்டா’ போல அட்டகாசமாக மிளிர்கிறார். […]

Read More

காமெடி நடிகராக களம் இறங்கும் தங்கர் பச்சான்

by on February 26, 2019 0

தமிழ் இயக்குநர்களில் தனக்கென ஒரு அடையாளத்துடன் குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தும் விதமாகக் கதைகளை அமைத்து முன்னணி பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான்.  தன் படங்களில் முக்கியமான அல்லது கதை நாயகனாகவும் நடித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு கட்டத்தில் சினிமாவை விட பொது வாழ்வில் அதிகம் அக்கறை கொண்டிருந்ததால் சினிமாவுக்கு இடைவேளை விட்டிருந்தார். நீண்ட காலமாக வெளிவராமலிருந்த அவரது களவாடிய பொழுதுகள் படம் கடந்த வருடம் வெளியாகி அந்த இடைவெளியை கொஞ்சம் குறைத்தது.  இப்போது பிரபுதேவா நடிக்க […]

Read More

குழந்தைகள் தற்கொலையை தடுக்க விஷாலின் ஆக்‌ஷன்

by on February 25, 2019 0

பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர் இந்தப்பட்டியலில் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது.   இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் ‘தி திஷா ஹெல்ப்லைன் ‘ உடன் கைகோர்த்துள்ளார் விஷால். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.   மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் […]

Read More