December 27, 2024
  • December 27, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • விமல் ஜோடியாக ஸ்ரேயா – ஆர் மாதேஷ் இயக்கும் படம்

விமல் ஜோடியாக ஸ்ரேயா – ஆர் மாதேஷ் இயக்கும் படம்

By on July 13, 2019 0 475 Views

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு ” சண்டகாரி – The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்..

இந்த படத்தில் விமல் கதா நாயகனாக நடிக்கிறார்…கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார்…முக்கியமான வேடத்தில் பிரபு , சத்யன், மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள் நடிக்கின்றனர்.. சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடம் ஏற்கிறார்..

ஒளிப்பதிவு – குருதேவ் ,
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – கபிலன் விவேக்
எடிட்டிங் – தினேஷ்
கலை- அய்யப்பன்
நடனம் – அபீப்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் R.மாதேஷ்……

விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த் நடித்த அரசாங்கம் ,வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர்.

மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப் படும் படம் இது…

திரிஷ்யம் எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அது மாதிரி மை பாஸ் கேரளாவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த படம் …
படப் பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது…முதல் கட்ட படப்பிடிப்பு நியூயார்க் வெனிஸ் லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது…மற்றும் கொச்சின் கோவா காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற்றுக்கொண்டு உள்ளது…

படத்தைப் பற்றி இயக்குனர் மாதேஷ் ” வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம்.முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.. பெரும் பகுதி வெளி நாடுகளில் படப் பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது… தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது .. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது..” என்றார் இயக்குனர் R.மாதேஷ்..