January 22, 2025
  • January 22, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல்

லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல்

By on July 19, 2019 0 803 Views

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
 
தனா இப்படத்தை இயக்குகிறார். மேலும், மணிரத்னம் இப்படத்தை தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார். பல வெற்றி பாடல்களைப் பாடி அதன்மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார்.

இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.

ஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கையாள ப்ரீதா கேமராவை இயக்குகிறார். கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, சங்கதமிழன் படத்தொகுப்பைக் கவனித்துக்கொள்கிறார். சண்டை பயிற்சியை சாமும், அலங்காரத்தை சண்முகமும் செய்கிறார்கள். விஜி சதீஷ் நடனத்தை கையாளுகிறார். ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இசை லேபிள் சோனி.

‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. 2020-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள் : விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு மற்றும் பலர்.