மூன்று தலைமுறைக் கதை. மூன்று தலைமுறைகளிலும் இளைய பருவத்தில் ஹிப் ஹாப் ஆதியே இடம் பெறுகிறார். இந்த முறை அவர் மீசையை முறுக்கி இருப்பது இசைக்காக.
கானா பாடல்கள் கவனம் பெறாத காலக்கட்டத்தில் தொடங்குகிற கதை. அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த பாரம்பரிய இசைக்குப் போட்டியாக கானாவையும் கொண்டு வர முயற்சித்த முதல் தலைமுறை ஆதி தோற்றுப் போக, அடுத்த தலைமுறையில் அவர் மகனின் முயற்சியும் தோற்றுப் போக, இந்தத் தலைமுறையில் அது முடிந்ததா என்பதுதான் கதை.
மூன்று தலைமுறைகளிலும் இளைய பருவத்தை கையில் எடுத்துக் கொண்டதால் ஆதி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அடி தடி என்று ஆர்ப்பாட்டமாக வருகிறார்.
என்ன ஒன்று காலத்துக்கு தகுந்தார் போல் ஹேர் ஸ்டைலை மட்டும் மாற்றிக் கொண்டிருக்கிறது அவருக்கு வசதியாக போய்விட்டது.
ஆனால், படத்தில் நடிப்பது மட்டுமன்றி, இசையமைத்து, இயக்கத்தை ஏற்று என்று பெரிய பொறுப்புகளைச் சுமந்திருக்கும் அவர் திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும். அத்துடன் இன்றைய ஜென் z தலைமுறைக்குப் pidikkum விதத்தில் அதனைச் செய்திருப்பதால் வெற்றி பெற்றிருக்கிறார் அவர்.
சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு நாயகி என்று மூன்று நாயகிகளும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்சத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சரியான முறையில் வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மூன்று காலக்கட்டங்களின் வேறுபாடுகளை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர், இயக்குநர் வரிசைப்படுத்திக் கொடுத்தபடி காட்சிகளை தொகுத்திருந்தாலும், படம் தொய்வில்லாமல் நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கி இசையமைத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி, முதல் பாகத்தின் அதே மையக்கருவை ஒரு கையிலும், மறு கையில் சென்னை கானா கலைஞர்கள் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் என்ற புரட்சி பதாகையுடன் திரைக்கதை அமைத்து இளைஞர்களை ஈர்க்க முயற்சித்திருக்கிறார்.
இளைஞர்களின் பல்ஸ் அறிந்து பாடல்கள் மற்றும் காட்சிகளை சரியான முறையில் வடிவமைத்து திரையரங்கையே பெரும் திருவிழாவாக மாற்றியிருக்கும் ஆதி, அதிகமான பாடல்களை வைத்து ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி போல் படத்தை கொடுத்திருந்தாலும், இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் எதுவும் புரியாதது பெரும் ஏமாற்றம். குறிப்பாக ஆதி பெரிதும் பில்டப் கொடுத்த கிளைமாக்ஸ் பாடல் சுத்தமாக புரியவில்லை.
திரைப்படம் என்றாலே ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆதியின் லாஜிக்கிற்கு ஏற்றவாறு படம் இருந்தாலும், முதல் பாகத்தைப் போலவே திரைக்கதை பயணிப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதே சமயம், இத்தகைய ஏமாற்றங்களை மறந்து படத்தை கொண்டா வைக்கும் பல விசயங்களை வைத்து தனது தம்பிகள் மற்றும் தங்கைகளை திருப்திப்படுத்தும் ஆதி மீண்டும் ஒரு முறை ஜெயித்து மீசைய முறுக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மீசைய முறுக்கு 2